பத்திரிகையாளருக்கு மிஸ்பா உல் ஹக் அளித்த வித்தியாசமான பதில்!

Updated: 26 September 2019 16:50 IST

முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, மிஸ்பா ஊடகங்களை உரையாற்றும் போது, ​​ஒரு பத்திரிகையாளர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் வீதம் குறித்து அவரிடம் கேட்டபோது நகைச்சுவையான பதிலளித்தார்.

Pakistan vs Sri Lanka: Misbah-ul-Haq
பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரும் தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் தனது முதல் பணிக்கு தயாராக உள்ளார். © AFP

பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரும் தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் தனது முதல் பணிக்கு தயாராக உள்ளார். ஏனெனில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பாகிஸ்தான் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் இலங்கை மூன்று ஒருநாள் போட்டிகளிலும்,  டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, மிஸ்பா ஊடகங்களை உரையாற்றும் போது, ​​ஒரு பத்திரிகையாளர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் வீதம் குறித்து அவரிடம் கேட்டபோது நகைச்சுவையான பதிலளித்தார். ஒரு பத்திரிகையாளர் மிஸ்பா உல் ஹக்கிடம், பேட்ஸ்மேன்கள் கடினமான ஆட்டத்தை விட 'டுக் டுக்'கில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள், அவர்கள் 235 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார்கள் என்றார். "நீங்கள் பேட் செய்யும்போது கூட, உங்கள் இன்னிங்ஸை நோக்கி இதேபோன்ற அணுகுமுறையைக் கொண்டிருந்தீர்கள். எனவே, தலைமை பயிற்சியாளராக நீங்கள் பேட்ஸ்மேன்களை 'டுக் டுக்'கில் அதிக கவனம் செலுத்தி, கடினமான பேட்டிங்கை ஒதுக்குவீர்களா?" என்று பத்திரிகையாளர் மிஸ்பா-உல்-ஹக்கிடம் கேட்டார்.

பதிலுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன், பத்திரிகையாளரிடம், பயிற்சியாளரை எரிச்சலூட்ட யாராவது கேட்டுள்ளார்களா? என்றார்.

"நீங்கள் அதிகமாக டுக் டுக்கில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு இன்று கார் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றால் யாராவது பயிற்சியாளரை எரிச்சலூட்ட சொன்னார்களா?," என்று மிஸ்பா-உல்-ஹக் கூறினார்.

45 வயதான அவர் மேலும் கூறுகையில், இலங்கை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வது ஊக்கமளிப்பதாக கூறினார்.

"பாகிஸ்தானுக்கு வரும் இலங்கை அணி ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். பாகிஸ்தானை மட்டுமல்ல, இதுபோன்ற எந்த சூழ்நிலையும் உள்ள எந்த இடத்தையும் நாடுகள் ஆதரிக்க வேண்டும், ஏனெனில் இது இல்லாமல் கிரிக்கெட்டின் பிழைப்பு கடினம்," என்றார்.

வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்குப் பிறகு, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் டெஸ்ட் தொடருக்காக இலங்கை இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுக்கு திரும்பும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
பத்திரிகையாளருக்கு மிஸ்பா உல் ஹக் அளித்த வித்தியாசமான பதில்!
பத்திரிகையாளருக்கு மிஸ்பா உல் ஹக் அளித்த வித்தியாசமான பதில்!
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
Advertisement