முதல் போட்டியில் சதம்: கப்திலை பேட்டியெடுத்த அவருடைய மனைவி!

Updated: 15 February 2019 12:35 IST

மார்டின் கப்தில் லவ்ரா மெக் கோல்ட்ரிக் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

New Zealand vs Bangladesh: Martin Guptill Gets Interviewed By Wife Laura McGoldrick After Match-Winning Knock
ஆட்டம் முடிந்து பின் கப்திலை அவருடைய மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்தார். © Twitter

பங்களாதேஷுடனான முதல் ஒருநாள் போட்டியை வென்று ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது நியூசிலாந்து. நேப்பியரில் நடைபெற்ற ஆட்டத்தில் கப்தில் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியை, நியூசிலாந்து ஐந்து ஓவர் மீதமிருக்கையில் வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கப்தில் அறிவிக்கப்பட்டார். ஆட்டம் முடிந்து பின் கப்திலை அவருடைய மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்தார்.

பேட்டியில் பேசிய கப்தில் பந்துவீச்சாளர்களை பாராட்டினார். முதல் 10 ரன்களுக்குள் பங்களாதேஷின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது அணிக்கு வெற்றி தேடி தந்ததாக கூறினார்.

மேலும், ராஸ் டெய்லருடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். "அனைத்து நேரங்களிலும் நானும் டெய்லரும் அதிக நேரம் பேட் செய்ய வேண்டும் என்று நினைப்போம்" என்றார். 

நியூசிலாந்துக்கு எதிராக அடுத்து பிப்ரவரி 16 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் அடுத்த போட்டிகளில் ஆடவுள்ளது பங்களாதேஷ்.

இந்த தொடருக்கு அடுத்து பங்களாதேஷுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இது பிப்ரவரி 28ம் தேதி துவங்குகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • கப்தில் லவ்ராவை 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்
  • நேப்பியரில் நடந்த போட்டியில் கப்தில் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்தார்
  • கப்தில், 10 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களை பாராட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
Advertisement