"லயன் கிங்" - நாதன் லயனை வாழ்த்தி ட்விட்டரில் வெளியான வீடியோ!

Updated: 06 August 2019 17:06 IST

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Watch: "Lyon King" Tribute For Australian Spinner Wins Over Fans On Twitter
ஆப் ஸ்பின்னர் லயன் 49 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தினார் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். © AFP

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 398 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு சதங்கள் குவித்தார். சிறப்பாக செயல்பட்ட நாதன் லயன் எல்லோரிடமும் வாழ்த்துக்கள் பெற்றார். "லயன் கிங்" என்று அவரை ட்விட்டரில் ரசிகர்கள் புகழ்ந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற நம்பிக்கையோடு ஆடிய இங்கிலாந்து அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 50 ஓவர் போட்டியில் தோல்வியுற்றது.

இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு சுருண்டது. ஆப் ஸ்பின்னர் லயன் 49 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தினார் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

எட்க்பாஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 2001ம் ஆண்டுக்கு பிறகு முதல் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் வென்றது. வார்விக்சைர் தலைமையகத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 11 முறை வென்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கடைசி கட்டத்தில் வெற்றியை கைநழுவவிட்ட நாதன் லயன்!
கடைசி கட்டத்தில் வெற்றியை கைநழுவவிட்ட நாதன் லயன்!
"லயன் கிங்" - நாதன் லயனை வாழ்த்தி ட்விட்டரில் வெளியான வீடியோ!
"லயன் கிங்" - நாதன் லயனை வாழ்த்தி ட்விட்டரில் வெளியான வீடியோ!
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
Advertisement