தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !

Updated: 11 September 2019 15:09 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

Krunal Pandya Issues Warning To Rivals With Hard-Hitting Shots In Nets. Watch Video
க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், ஆட்ட நாயகன் விருதை பெற்றார். © Twitter

இந்திய அணியில் ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலை பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார். க்ருணால் பாண்ட்யா, 56 வினாடிகளுடைய வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில், குறிப்பிடும்படியான ஷார்ட்டுகளை ஆடினார். ஐசிசியின் டி20 உலகக் கோப்பைக்கான ஆட்டம் 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இதில் முதல் தொடரில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தில் டி20 தொடரை கைப்பற்றியது. அடுத்த டி20 தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடவுள்ளது இந்தியா.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

க்ருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யாவுடன் ஆடவுள்ளார். உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா ஆடவிருக்கும் முதல் போட்டி இது. உலகக் கோப்பையில் வேலைபளு அதிகம் இருந்ததால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

25 வயதான ஹர்திக் பாண்ட்யா, தோனியைப் போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார்.

"வலைப் பயிற்சி சிறப்பாக அமைந்தது. வீரர்களுடன் இணைந்து ஆடுவதில் ஆவலாக உள்ளேன்," என்று ஹர்திக் பாண்ட்யா ட்விட் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இணைந்துள்ளார் பாண்ட்யா. ஆனால், தோனி மற்றும் பும்ரா 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. தேர்வுக் குழுவினர், தோனியிடம் இது குறித்து பேசினார்களா என்ற தகவல் இல்லை.

சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களாக நவ்தீப் சைனி, தீபக் சாஹர், கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
Advertisement