500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்!

Updated: 06 March 2019 15:45 IST

கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது வெறும் ஆறு போட்டிகளிலேயே அனுபவம் உள்ள விஜய் சங்கரை பந்துவீச வைத்து அசத்தினார் கோலி.

Virat Kohli, Vijay Shankar Reveal How India Won Their 500th ODI On "Chahal TV" - Watch
சஹால் டிவி நிகழ்ச்சியில் கேப்டன் கோலியும், விஜய் சங்கரும் கலந்து கொண்டு சஹாலுடன் உரையாடினர். © Screengrab: @bcci

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா ஒருநாள் போட்டிகளில் தனது 500வது வெற்றியை பதிவு செய்தது. ஒருநாள் போட்டிகளில் 500வது வெற்றியை பதிவு செய்யும் இரண்டாவது அணி இந்தியாவாகும். 558 போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. விராட் கோலியின் அபார சதத்தால் இரண்டாவது போட்டியில் இந்தியா 250 ரன்கள் குவித்தது. முன்னதாக டாஸ் வென்று பந்து வீசிய ஆஸ்திரேலியா இந்தியாவை 48.2 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

பின்னர், இந்த ரன்னை இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா பந்துவீச்சில் நெருக்கடி தந்தார். ஷமி மற்றும் விஜய் சங்கர் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலியா 242 ரன்களக்கு ஆல் அவுட் ஆகி இந்தியாவிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. போட்டி முடிந்து பிசிசிஐ இணையதளத்தில் ஒளிபரப்பாகும் சஹால் டிவி நிகழ்ச்சியில் கேப்டன் கோலியும், விஜய் சங்கரும் கலந்து கொண்டு சஹாலுடன் உரையாடினர்.

"நானும், ரோஹித் மற்றும் தோனியும் நிறைய பேசினோம். 46வது ஓவரை யாரிடம் கொடுப்பது என்பதில் ஒரு சிக்கல் இருந்தது. சுழற்பந்துவீச்சாளரிடம் கொடுத்தால் சிக்ஸர் அடிப்பார்கள் என்று யுகிக்க முடிந்தது. அதனால் ரிவர்ஸ் ஸ்விங் வீசும் வேகப்பந்துவீச்சாளர்களிடம் தந்தோம். விஜய் அதை நிரூபித்தார்" என்றார் கோலி.

கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது வெறும் ஆறு போட்டிகளிலேயே அனுபவம் உள்ள விஜய் சங்கரை பந்துவீச வைத்து அசத்தினார் கோலி. விஜய் சங்கரும் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்வதை கணித்து விஜய் சங்கரை பந்துவீச அழைத்ததாக கூறினார். 

இது குறித்து கூறிய விஜய் சங்கர் ''நான் 43வது ஓவரிலிருந்தே பந்துவீச‌ தயாராக இருந்தேன். கடைசி ஒவரில் 10 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது என் மனதில் இருந்த விஷயம் தான். அதேபடி அமைந்தது. அதனை செய்து முடித்தேன்" என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒருநாள் போட்டிகளில் 500வது வெற்றியை பதிவு செய்யும் இரண்டாவது அணி இந்தியா
  • இந்தியா ஒருநாள் போட்டிகளில் தனது 500வது வெற்றியை பதிவு செய்தது
  • சஹால் டிவி நிகழ்ச்சியில் கேப்டன் கோலியும், விஜய் சங்கரும் பங்கேற்றனர்
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement