அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!

Updated: 10 July 2019 19:22 IST

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கை ஜிம்மி நீஷம் கேட்ச் செய்த விதம் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக அமைந்தது.

India vs New Zealand Semi Final: Jimmy Neesham
இந்தியா 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் குவித்தது.  © Twitter

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஜிம்மி நீஷம் பிடித்த கேட்ச் அபாரமானதாக அமைந்தது. இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கை அவர் கேட்ச் செய்த விதம் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக அமைந்தது. மழையால் பாதிக்கப்பட்டு இரண்டாவது நாளாக தொடரும் அரையிறுதிப்போட்டியில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை ஹென்றி பந்தில் நீஷம் கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். முதல் பந்த்து ஓவரில் இந்தியா 24 ரன்களை சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது. 

வர்ணணையாளராக இருந்த மார்க் நிக்கோலஸ் இதனை சிறந்த கேட்ச்களில் ஒன்று என்றார்.

இதனை ரசிகர்கள் ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக 50 ஓவர்களில் நியூசிலாந்தை இந்தியா 239 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதன்பின் களமிறங்கிய இந்தியா 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கோலி, ரோஹித், ராகுல் தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்த தொடரில் 5 சதங்கள் அடித்த ரோஹித் ஒரு ரன்னில் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார், கோலி போல்ட் பந்தில் ஒரு ரன்னில் எல்பி.டபிள்.யூ ஆனார்.

இந்தியா 5 ரன்னுக்குள் மூன்று பேரையும் இழந்தது. ஹென்றி சிறப்பாக பந்துவீசினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
Advertisement