இஷாந்த் - ஜடேஜா சண்டை: பெர்த் டெஸ்ட்டில் மேலும் ஒரு ஸ்லெட்ஜிங்

Updated: 19 December 2018 11:19 IST

இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் இடையேயான மோதல் வைரலாகியுள்ளது.

India vs Australia: Ishant Sharma, Ravindra Jadeja Argue On The Field
கோலி மற்றும் பெய்ன் இடையேயான விவாதம் செய்திதாள்களின் தலைப்பு செய்தி ஆகுமளவுக்கு பேசப்பட்டது. © Twitter

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. மேலும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக அமைந்தது. சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளையும், தொடரில் ஃபார்மில் இல்லாத உஸ்மான் கவாஜா 72 ரன்கள் குவித்தும் அணியின் வெற்றிக்கு உதவினர். 

இது தான் ஆஸ்திரேலிய கேப்டனாக டிம் பெய்ன் தலைமையிலான முதல் வெற்றி. ஸ்மித் தடைக்கு பின் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் முதல் போட்டியும் இது தான்.

ஆனாலும் இந்தப் போட்டிக்கு இன்னொரு சிறப்பும் அமைந்துள்ளது. ஆப்டஸ் மைதானத்தின் அறிமுக டெஸ்ட் இந்த போட்டிதான், இதில் ஸ்லெட்ஜிங்கிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. கோலி மற்றும் பெய்ன் இடையேயான விவாதம் செய்திதாள்களின் தலைப்பு செய்தி ஆகுமளவுக்கு பேசப்பட்டது. அதேபோல் கோலியின் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆனதும் சர்ச்சையானது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையேயான மோதல் வைரலாகியுள்ளது. ஜடேஜா சப்ஸ்ட்யூட் ஃபீல்டராக ஆடிக்கொண்டிருந்தார்.  இது பீல்டிங் தொடர்பான காரசாரமான விவாதம் என்று கூறப்படுகிறது. பின்னர் குல்தீப் யாதவும், ஷமியும் இருவரையும் விலக்கி அழைத்து சென்றனர். ஜடேஜா தேர்வு செய்யப்படாததற்கு கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தனர். இந்நிலையில் 3வது டெஸ்டில் ஜடேஜா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
ஐபிஎல் 2019: களத்தில் வாட்சனுடன் மோதிய இஷாந்த், ரபாடா
ஐபிஎல் 2019: களத்தில் வாட்சனுடன் மோதிய இஷாந்த், ரபாடா
இஷாந்த் ஷர்மாவின் ஐபிஎல் கனவு என்ன தெரியுமா?
இஷாந்த் ஷர்மாவின் ஐபிஎல் கனவு என்ன தெரியுமா?
Advertisement