பும்ராவை போல் பந்துவீசி அசத்திய ஹாங்காங் சிறுவன்!

Updated: 05 March 2019 13:41 IST

13 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஹாங்காங்கை சேர்ந்த இளம்வீரர் பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலை இமிடெட் செய்து அசத்தியதாக ஹாங்காங் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. 

India vs Australia: Jasprit Bumrah
ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலை இமிடெட் செய்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த இளம்வீரர். © AFP

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளார். அவர் பல இளம் வீரர்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாகவும் உள்ளார். ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலை இமிடெட் செய்வது கடினம். ஆனால், அதனை அச்சு அசலாக அப்படியே இமிடேட் செய்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த இளம்வீரர். 13 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக ஹாங்காங் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. 

ஹாங்காங் கிரிக்கெட் பும்ராவையும் டேக் செய்து இந்த பதிவை பதிவிட்டுள்ளது. 

பும்ரா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்தவர். ஆஸ்திரேலியாவில் ஜனவரி 23, 2016ல் அறிமுகமான இவர் தரவரிசையில் வேகமாக முன்னேறினார்.

45 ஒருநாள் போட்டிகளில் ஆடி 21.23 சராசரி மற்றும் 4.48 எக்கானமியுடன் 80 விக்கெட்டுகளையும், 42 டி20 போட்டிகளில் ஆடி 20.17 சராசரி மற்றும் 6.71 எக்கானமியுடன் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான பும்ரா ஒரே வருடத்தில் 10 போட்டிகளில் ஆடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 3 ஐந்து விக்கெட் இன்னிங்ஸ்களும் அடங்கும்.

25 வயதான இவர் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலை இமிடெட் செய்துள்ளார் ஹாங்காங் இளம்வீரர்
  • ஹாங்காங் கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது
  • ஒருநாள், டி20 போட்டிகளில் கவனிக்கப்படும் பந்துவீச்சாளராக பும்ரா உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
Advertisement