பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video

Updated: 20 August 2019 18:21 IST

ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் அந்த வீடியோவுக்கு பதிலளித்து வந்தனர்.

Hardik Pandya
உலகக் கோப்பைக்கு பிறகு தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஓய்வை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. © Instagram

உலகக் கோப்பைக்கு பிறகு தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஓய்வை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. சில நாட்கள் சமூக வலைதளத்தில் காணப்படாத ஹர்திக் பாண்ட்யா இப்போது மீண்டும் லைம் லைட்டில் தென்பட்டுள்ளார். சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேபி சிட்டிங் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் அந்த குழந்தையை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். "#thatcricketguy @jatin_sapru இவர்களுக்காக பேபி சிட்டிங் செய்கிறேன்," என்று பதிவிட்டார். மற்ற இந்திய வீரர்கள் விளையாட களத்துக்கு வந்து விட்ட நிலையில், ஹர்திக் பாண்ட்யா மட்டும் உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருக்கிறார்.

Babysitting Sunday For #thatcricketguy @jatin_sapru

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் அந்த வீடியோவுக்கு பதிலளித்து வந்தனர்.

ஹர்திக் பாண்ட்யா மட்டுமல்ல, க்ருணால் பாண்ட்யாவும் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவுக்கு பாராட்டு பெற்றார். அதில் ஹர்திக் மற்றும் க்ருணால் இருவரும் பாடம் பாடுகிறார்கள்.

"பாண்ட்யாவின் மியூசிக் ஸ்டியோவில் வை திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி @hardikpandya7," என்று ட்விட் செய்தார் க்ருணால் பாண்ட்யா.

கடந்த வாரம் ஹர்திக் மற்றும் க்ருணால் இருவரும் மும்பை சாலையில் லாம்போர்கினி ஹரிகேன் ஈவோ ஓட்டும் வீடியோ வைரலானது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அனைத்து போட்டிகளுக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. க்ருணால் பாண்ட்யா, டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றார்.

க்ருணால் பாண்ட்யா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து, தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினார். அதனால், அந்த தொடரின் சிறந்த வீரர் என்ற விருது பெற்றார்.

செப்டம்பரில் நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான தொடரில் ஹர்திக் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் இந்தியா ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
Advertisement