முடி வளர ஷிகர் தவான் மகன் கண்டுபிடித்த புது டெக்னிக்!

Updated: 30 January 2019 13:02 IST

ஷிகர் தவான், சமூக வலைதளங்களில் தன்னுடைய குடும்பத்தினர் குறித்தான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Shikhar Dhawan
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 169 ரன்கள் எடுத்துள்ளார் ஷிகர் தவான். © Instagram

நியூசிலாந்து தொடரில் இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் தொடர்ந்து இரண்டு அரைசதங்களை அடித்து அசத்தி வருகிறார். 33 வயதான தவான் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது மகன் ஸோராவெரை தோள்களில் சுமந்து தவான் விளையாடும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அதில் தவானின் மகன் அவரது தலையில் உப்பைக் கொட்டினார். தலையில் உப்பைக் கொட்டினால் முடி வளரும் என்று கிண்டலடித்தவாறு அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் குவித்தார். கேப்டன் கோலியுடன் 91 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது போட்டியில் 66 ரன்கள் குவித்தார். தவான், ரோஹித் இருவரும் 154 ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது போட்டியிலும் 28 ரன்கள் எடுத்தார் தவான். இந்தியா இந்த போட்டியையும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடித்தார் தவான்
  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் குவித்தார்
  • ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement