காயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்!

Updated: 19 July 2019 11:32 IST

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராக் சிங், தவானுக்கு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்யும் படி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை நிறைவு செய்தார் ஷிகர் தவான்.

Shikhar Dhawan Picks Up Bat For The First Time After Thumb Injury. Watch
காயத்துக்கு பிறகு நேற்று முதல்முறையாக பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் ஷிகர் தவான். © Twitter

உலகக் கோப்பை பாதியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்காக நாடு திரும்பிய ஷிகர் தவான், நேற்று முதல்முறையாக பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராக் சிங், தவானுக்கு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்யும் படி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனால், தவான் நீண்ட நாட்களுக்கு பிறகு நெட் பயிற்சிக்கு திரும்பி இதை செய்தார். தவான், இந்த சேலஞ்சை முடித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். "யூவி பாஜி, இதோ என்னுடைய #BottleCapChallenge! காயத்துக்கு பிறகு நான் பேட் எடுப்பது இதுவே முதல்முறை. திரும்ப ஆட வந்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்று வீடியோவுடன் இதை பதிவிட்டார் தவான்.

காயத்திலிருந்து மீண்டு வரும் தவான், சமூக வலைதளத்தில் இருக்கும் ட்ரெண்டை ஃபாலோ செய்து வருகிறார். சமீபத்தில், தனக்கு வயதான மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டார், அதுவும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டான ஒன்று.

தவான், உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடினார். கையில் காயம் ஏற்பட்டிருந்த போது, 117 ரன்கள் எடுத்து, அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

உலகக் கோப்பையில் தவானுக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இணைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 3ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியுடான  சுற்றுப்பயணத்திற்கான அணியை இன்று தேர்வு செய்யவுள்ளனர். ஒரு மாதம் நடக்கவிருக்கும் சுற்றுப்பயணத்துல் 3 டி20 போட்டிகள், பல ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
India vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா!
India vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா!
இந்தியா vs இலங்கை இரண்டாவது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs இலங்கை இரண்டாவது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
IND vs SL 2nd T20I: இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகள்!
IND vs SL 2nd T20I: இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகள்!
ஷிகர் தவானை அதிகம் விளையாட ஊக்கப்படுத்தும் மகன் ஜோராவர்!
ஷிகர் தவானை அதிகம் விளையாட ஊக்கப்படுத்தும் மகன் ஜோராவர்!
Advertisement