"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!

Updated: 20 September 2019 10:57 IST

ரோஹித் மற்றும் தவான் இருவரும் ஜடேஜாவிடம் தான் அவர் குழந்தைக்கு எப்போதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா என்று கேட்டனர். ஆனால், ஜடேஜா ஒரு பொம்மை பெயர் கூட கூறவில்லை.

Shikhar Dhawan Introduces Rohit Sharma, Ravindra Jadeja As "Loving And Caring Fathers". Watch
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 40 ரன்கள் குவித்தார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 40 ரன்கள் குவித்தார். மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் நடக்கவிருப்பதால், வீரர்கள் விமானத்தில் அங்கு புறப்பட்டனர்.
விமானித்திலிருந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார் ஷிகர் தவான், அதில், ரோஹித் ஷர்மா பொம்மைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அது அவர் குழந்தைக்காக வாங்கியவை. "எங்கள் அணியில் இருக்கும் பொறுப்பான மற்றும் அன்பான அப்பாக்களை சந்தியுங்கள் @rohitsharma45 & @royalnavghan," அந்த வீடியோவுடன் இதை பதிவிட்டார் தவான். தவானுக்கு பதிலளித்த ரோஹித், தனக்கு பிடித்த பொம்மை எடுத்து, "அவர்கள் பெங்களூருவுக்கு வருகிறார்கள், அதனால் இதை அவர்களிடம் கொடுக்கலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்," குழந்தை சமைராவை குறிப்பிட்டு கூறினார். அவர் குழந்தைக்கு பொம்மைகள் மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார் ரோஹித்.

பின்னர் ரோஹித் ஷர்மா, பின்னால் உட்கார்ந்திருக்கும் இன்னொரும் தந்தையான ரவீந்தர ஜடேஜாவுக்கு கேமரா திருப்பும்படி சொன்னார்.

அதன்பின், ரோஹித் மற்றும் தவான் இருவரும் ஜடேஜாவிடம் தான் அவர் குழந்தைக்கு எப்போதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா என்று கேட்டனர். ஆனால், ஜடேஜா ஒரு பொம்மை பெயர் கூட கூறவில்லை.

ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா இந்த வீடியோவை பார்த்து, அதற்கு பதிலளித்தார்.

தவான் இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ரோஹித் ஷர்மா 12 ரன்களுடன் அவுட் ஆனார்.

ஆல் ரவுண்டர் ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார். நவ்தீப் சைனிக்கு பிறகு மிக முக்கியமான பவுலராக உள்ளார்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி மூன்று போட்டிகல் கொண்ட டி20 போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் நடக்கவுள்ளது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
Advertisement