"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!

Updated: 21 September 2019 16:27 IST

டேவிட் வார்னர் இதற்கு டபள்யூடபிள்யூஇ ராக் ஸ்டார் ஃப்ளேரின் ஸ்டைல் சைகையை பதிலாக அளித்து சென்றார்.

David Warner
ரசிகர் ஒருவர் மிகவும் மோசமான ஆபாச வார்த்தையை கூறி வார்னர் களமிறங்கும் போது கத்தினார். © Twitter

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வார்னரை தகாத வார்த்தைகளால் 2019 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர்களில் வசைபாடி வருகின்றனர் இங்கிலாந்து ரசிகர்கள். அவர் இதற்கு எந்தவித ரீயாக்‌ஷனும் கொடுக்காமல் அமைதியாக கையாண்டு வருகிறார். ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் வார்னர் க்ஜளமிறங்கும் போதும், ஆட்டமிழந்து திரும்பும் போதும் உப்புத்தாளை காட்டினர். இதே அணுகுமுறையில் ஓல்ட் ட்ராஃபோடிலும் வார்னரை நோக்கிய வசைபாடும் செயல் தொடர்ந்தது.

ரசிகர் ஒருவர் மிகவும் மோசமான ஆபாச வார்த்தையை கூறி வார்னர் களமிறங்கும் போது கத்தினார்.

டேவிட் வார்னர் இதற்கு டபள்யூடபிள்யூஇ ராக் ஸ்டார் ஃப்ளேரின் ஸ்டைல் சைகையை பதிலாக அளித்து சென்றார்.

வார்னரை இந்த ஆஷஸ் தொடரில் ஐந்துமுறை ஸ்டூவர்ட் ப்ராடு வீழ்த்தியுள்ளார். வார்னர் இந்த மோசமான சாதனையை இந்த ஆஷஸ் தொடரில் பதிவு செய்துள்ளார்.

வார்னர் இந்த தொடரில் 2, 8, 3, 5, 61, 0 மற்றும் என்ற எண்ணிக்கையிலேயே ஆட்டமிழந்துள்ளார். இதில் இரண்டு தொடர் டக் அவுட்களும் அடங்கும்.

மொத்தமாக 11.29 சராசரியுடன் 7 இன்னிங்ஸில் 79 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

2018 ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட்டில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடைவிதிக்கப்பட்டார்.

ஆஷஸ் 2019 தொடரில் தற்போது 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் நடைபெற்று வருகிரது. ஐந்தாவது டெஸ்ட் வரும் செப்டம்பர் 12ம் தேதி துவங்குகிறது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
Advertisement