தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!

Updated: 05 August 2019 14:51 IST

உலகக் கோப்பையின் போது ஸ்மித் மற்றும் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக நடந்துக்கொண்டனர். அது இப்போது ஆஷஸ் தொடரிலும் தொடர்ந்துள்ளது.

David Warner
ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வார்னர் தன் கைகளை விரித்து எதுவுமில்லை என்று காட்டினார். © Twitter

உலகக் கோப்பையின் போது ஸ்மித் மற்றும் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக நடந்துக்கொண்டனர். அது இப்போது ஆஷஸ் தொடரிலும் தொடர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஆஷஸ் தொடர் எட்பாஸ்டனில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். டேவிட் வார்னர் மற்றும் பான்க்ராஃப்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்க ஓவர்களை ஆன்டர்சனும், ப்ராடும் வீசினர். அவர்கள் பேட்ஸ்மேனை திணறடிக்கும் விதமாக வீசினர்.  துவக்க வீரர்களை ப்ராட் அபாரமாக பந்து வீசி அவுட் ஆக்கினார். வார்னர் 2 ரன்களில் ப்ராட் பந்தில் வெளியேறினார்.

வார்னர் அவுட் ஆகி வெளியேறும் போது மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் உப்புத்தாளை காட்டி வழியனுப்பினர். ஸ்மித்தை கிண்டலடித்த ரசிகர்கள், அவர் சதமடித்ததும் அமைதி காத்தனர். 

ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வார்னர் தன் கைகளை விரித்து எதுவுமில்லை என்று காட்டினார். பின்னர், பாக்கெட்டுகளில் கைவிட்டு எதுவுமில்லை என்று காட்டியுள்ளார்.

I LOVE HIM#Ashes

A post shared by Aussie Aussie Aussie (@63notout.forever) on

2018 தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை உப்புத்தாள் கொண்டு சேதப்படுத்தியதற்காக மூன்று வீரர்களுக்கு ஓராண்டு தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

முதல் நாளில் வார்னர், பான்க்ராஃப்ட் என இருவருமே அந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு அணிக்கு திரும்பியவர்கள். அவர்களை முதல் நாளிலேயே ப்ராட் வெளியேற்றினார்.

ஆஸ்திரேலியா தற்போது ஆஷஸ் கோப்பையை வைத்திருந்தாலும், 2001க்கு பிறகு இங்கிலாந்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை. அதேபோல இங்கிலாந்து எட்பாஸ்டனில் கடைசியாக ஆடிய 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததே இல்லை. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
Advertisement