2வது ஒருநாள் போட்டி: ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த புவனேஷ்வர் குமார்!

Updated: 12 August 2019 13:05 IST

35வது ஓவரில் ராஸ்டன் சேஸை அவுட் ஆக்க பிடித்த கேட்ச் மூலமாக ஆட்டத்தில் புவேனேஷ்வர் குமாரின் செயல் சிறப்பாக பேசப்பட்டது.

Bhuvneshwar Kumar Wows Fans With Sensational Return Catch In 2nd ODI. Watch Video
நிக்கோலஸ் பூரான், 42 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி இந்தப் போட்டியில் ஒரு சதம் அடித்தார். பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இருப்பினும், 35வது ஓவரில் ராஸ்டன் சேஸை அவுட் ஆக்க பிடித்த கேட்ச் மூலமாக ஆட்டத்தில் புவேனேஷ்வர் குமாரின் செயல் சிறப்பாக பேசப்பட்டது.

ராஸ்டன் சேஸ் புவனேஷ்வர் பந்தை நீண்ட தூரத்துக்கு அடிக்க முயன்றார், ஆனால், பந்து பவுடரிடமே விழுந்ததால், அவர் அவுட் ஆனார். அவர் அடித்த பந்தை, பந்து வீசிய புவனேஷ்வர் குமார் இடது கையில் பிடித்து அவுட் ஆக்கியது கேப்டன் விராட் கோலிக்கும், மற்ற வீரர்களுக்கும் உற்சாகம் அளித்தது. 

டாஸ் வென்ற விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடித்து 42வது சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது.

இரண்டாது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, 46 ஓவரில் 270 எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. 35வது ஓவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 179 எடுத்திருந்தது. அதன்பின் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் பூரான், 42 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மூன்று ஓவர்களுல், மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகள் இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

Comments
ஹைலைட்ஸ்
  • ராஸ்டன் சேஸை அவுட் ஆக்க புவேனேஷ்வர் குமார் ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார்
  • புவனேஷ்வர் குமார், 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்
  • இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
IndvsWI: ஒருநாள் தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர்!
IndvsWI: ஒருநாள் தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர்!
காயத்துக்கு பிறகு வலைப்பயிற்சியில் ஈடுப்பட உள்ளார் ஜஸ்பிரித் பும்ரா!
காயத்துக்கு பிறகு வலைப்பயிற்சியில் ஈடுப்பட உள்ளார் ஜஸ்பிரித் பும்ரா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
2வது ஒருநாள் போட்டி: ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த புவனேஷ்வர் குமார்!
2வது ஒருநாள் போட்டி: ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த புவனேஷ்வர் குமார்!
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் இந்தியாவின் உத்தேச அணி!
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் இந்தியாவின் உத்தேச அணி!
Advertisement