நூற்றாண்டின் கேட்ச்சாக மாறி இருக்க வேண்டிய‌ மெக்குலம் கேட்ச்!

Updated: 08 January 2019 13:17 IST

இடது கையால் அந்தப் பந்தை தடுத்து மைதானத்துக்குள் கொண்டு சென்றார். அந்ப்த பந்தில் சிக்சருக்கு பதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 

Big Bash League: Best Dropped "Catch Of The Century", Featuring Brendon McCullum - Watch
கிரிக்கெட் வர்ணணையாளர் மெல் ஜோன்ஸ் இதை இந்த நூற்றாண்டின் கேட்ச்சாக அமைந்திருக்க வேண்டிய முயற்சி என்றார். © Screengrab: @BBL

நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ப்ரெண்டன் மெக்குலம் ஆஸ்திரேலிய பிக்பேஷில் பேட்டிங்கில் அவ்வளவாக சிறப்பாக ஆடாவிட்டாலும், அவரது ஃபீல்டிங் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரிஸ்பென் ஹீட் அணிக்காக ஆடும் 37 வயதான மெக்குலம் இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்தார். மேலும், 14வது ஓவரில் ஒரு கேட்சை பிடிக்க முயற்சி செய்தார் அதை தவறவிட்டாலும், அது ஒரு சிறந்த முயற்சியாக பாராட்டப்பட்டது. 37 வயதில் இப்படி ஒரு அபாரமான முயற்சியால் சிக்ஸரை தடுத்தார். இடது கையால் அந்தப் பந்தை தடுத்து மைதானத்துக்குள் கொண்டு சென்றார். அந்தப் பந்தில் சிக்சருக்கு பதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 

கிரிக்கெட் வர்ணணையாளர் மெல் ஜோன்ஸ் இதை இந்த நூற்றாண்டின் கேட்ச்சாக அமைந்திருக்க வேண்டிய முயற்சி என்றார். நியூசிலாந்து வீரர் ஜிம்மி நஸிம் "37 வயதுக்காரரின் சிறப்பான முயற்சி" என்று பாராட்டியுள்ளார். பிக்பேஷ் தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கேட்ச் வீடியோவை "நியூசிலாந்து அணிக்கு பிஃபா போட்டிக்கு ஒரு நல்ல கோல்கீப்பர் கிடைத்துவிட்டார்" என்று பாராட்டி பகிர்ந்துள்ளனர்.

இதே ஆட்டத்தில் பான்க்ராஃப்ட் தந்த கேட்சை அபாரமான டைவ் மூலம் பிடித்தார். டேனியல் வெட்டோரி பயிற்சி அளிக்கும் இந்த அணியின் முதல் வெற்றி இது இதுவரை நான்கு ஆட்டங்களில் பிரிஸ்பென் ஹீட் ஆடியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020 Auction: "கொல்கத்தாவுக்கு சாதகமாக எல்லாம் அமையும்" - பிரெண்டன் மெக்கல்லம்
IPL 2020 Auction: "கொல்கத்தாவுக்கு சாதகமாக எல்லாம் அமையும்" - பிரெண்டன் மெக்கல்லம்
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
Advertisement