''மான்கடிங்கைவிட மோசமான ஸ்டம்பிங்'' சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்

Updated: 04 May 2019 15:16 IST

பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 61 ரன் குவித்து வெற்றிக்கு உதவிய அவர், இங்கிலாந்து ஃபீல்டிங்கின் போது ஃபோக்ஸ் செய்தது ஸ்டெம்பிங் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Ben Foakes
பென் ஃபோக்ஸின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  © Twitter

இங்கிலாந்து வீரர் பென் ஃபோக்ஸ் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 61 ரன் குவித்து வெற்றிக்கு உதவிய அவர், இங்கிலாந்து ஃபீல்டிங்கின் போது ஃபோக்ஸ் செய்தது ஸ்டம்பிங் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து பேட்ஸ்மேன் ஆன்டி பால்பிர்னேவை அபாரமாக ஸ்டம்பிங் செய்தார். ஆனால், அந்த ஸ்டம்பிங் சர்ச்சைக்குள்ளானது. சில ரசிகர்கள் இது மான்கடிங்கை விட மோசமானது என்றனர்.  அயர்லாந்தின் 20வது ஓவரில் பென் ஃபோக்ஸ் கையில் புகுந்த பந்தை கீப்பர் போக்ஸ் கையில் வைத்திருந்தார். பால்பினோ நகரும் வரை வெயிட் செய்து ஸ்டெம்பிங் செய்தார்.

மிக அதிக நேரம் எடுத்துக் கொண்ட நடுவர்கள் பேட்ஸ்மேன் அவுட் என அறிவித்தனர்.

பென் ஃபோக்ஸ் செய்தது முறைப்படி அவுட் என்றாலும், 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' படி இது முறையானது அல்ல என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அஷ்வின் செய்தததை ஒத்த விஷயம் இது என்று பலரும் ட்விட்டரில் விமர்சிக்கின்றனர்.

பென் ஃபோக்ஸின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், முதலில் ஆடிய அயர்லாந்து 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 66 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அயர்லாந்தின் அறிமுக வீரர் லிட்டில் ஜோஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் குரான் முறையே 61 மற்றும் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, 18 பந்துகள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஷஸ் உயிர்கொடுக்கிறது - கங்குலி
டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஷஸ் உயிர்கொடுக்கிறது - கங்குலி
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
தலையைப் பதம்பார்த்த பவுன்சர்… சுருண்டு விழுந்த ஸ்மித்… குலுங்கி சிரித்த ஆர்ச்சர்- ஆஷஸ் பகீர்!
தலையைப் பதம்பார்த்த பவுன்சர்… சுருண்டு விழுந்த ஸ்மித்… குலுங்கி சிரித்த ஆர்ச்சர்- ஆஷஸ் பகீர்!
Advertisement