''அப்பவே அப்படி'' 2012லேயே மான்கடிங் செய்தவர் அஷ்வின்!

Updated: 27 March 2019 21:29 IST

2012ம் ஆண்டு  காமன்வெல்த் பேங்க் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 40வது ஓவரை அஷ்வின் வீசினார். அதில் லஹிரு திரி மான்ன க்ரீஸை விட்டு வெளியேற அவரை அஷ்வின் மான்க்டிங் செய்தார்.

Ravichandran Ashwin Mankaded Another Batsman Before Jos Buttler - Watch
2012ம் ஆண்டு  காமன்வெல்த் பேங்க் தொடரில் லஹிரு திரி மான்னவை அஷ்வின் மான்க்டிங் செய்தார். © Screengrab: @cricketcomau

ஐபிஎல் 2019 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசினார். 

ராஜஸ்தான் வீரர் பட்லர் அஷ்வின் பந்து வீசும் போது பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார். ஆனால் பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபடி பட்லர் வெளியேறினார்.பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மான்கடிங் எனும் வினோதமான முறையில் பட்லரை அஷ்வின் வீழ்த்தினார். அஷ்வின் இதனை செய்வது ஒன்றும் புதிதல்ல. 2012ம் ஆண்டு  காமன்வெல்த் பேங்க் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 40வது ஓவரை அஷ்வின் வீசினார். அதில் லஹிரு திரி மான்ன க்ரீஸை விட்டு வெளியேற அவரை அஷ்வின் மான்க்டிங் செய்தார். 

பிறகு நடுவர் அப்போது கேப்டனாக இருந்த சேவாக்கை அப்பீலை மறுபரீசீலனை செய்ய சொன்னார். சேவாக்கும் கிரிக்கெட்டின் மரியாதையை கருத்தில் கொண்டு அவுட் வேண்டாம் என அப்பீலை திரும்ப பெற்றார்.

இது குறித்து அஷ்வினிடம் கேட்டபோது '' இதில் விவாதிக்க எதுவுமே இல்லை. நான் விதிமுறைப்படி தான் நடந்து கொண்டேன். அப்படியென்றால் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதோடு இது திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல தற்செயலானதே'' என்று கூறினார்.

இது விதிப்படி சரியானது என்று எம்.சி.சியின் விதிகளும் கூறியுள்ளது. விதி 41:16ன் படி " 'எதிர்முனையில் உள்ள  பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் பந்துவீச்சாளர் அவரை ரன் அவுட் செய்யலாம். இந்த ப்ந்து கணக்கில் கொள்ளப்படாது' என்று உள்ளது அதனால் இந்த அவுட் சரி" என்று கூறியுள்ளது. 

அப்படி ரன் அவுட் செய்ததும் அம்பயர் அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ராஹானே 27, பட்லர் 69 என ராஜஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை தந்த நிலையில் இந்த மான்கடிங் முறையில் படலர் அவுட் ஆனார். 

மான்கடிங் முறையில் ஐபிஎல் தொடரில் அவுட் ஆகும் முதல் வீரர் பட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • மான்கடிங் முறையில் ஐபிஎல் தொடரில் அவுட் ஆகும் முதல் வீரர் பட்லர்
  • 2012ம் ஆண்டு அஷ்வின் மான்கடிங் முறையை பயன்படுத்தியுள்ளார்
  • சேவாக் அப்போது அப்பீலை திரும்ப பெற்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
நித்யானந்தா கண்டுபிடித்ததாக சொல்லப்படும் நாட்டுக்கு
நித்யானந்தா கண்டுபிடித்ததாக சொல்லப்படும் நாட்டுக்கு 'விசா' கேட்டுள்ள ரவிசந்திரன் அஸ்வின்!
இம்ரான் தாஹிரை போல் கொண்டாத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்!
இம்ரான் தாஹிரை போல் கொண்டாத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
IndiavBan: சனத் ஜெயசூரியாவின் பந்து வீச்சு முறையை பின்பற்றும் அஸ்வின்!
IndiavBan: சனத் ஜெயசூரியாவின் பந்து வீச்சு முறையை பின்பற்றும் அஸ்வின்!
பத்திரிகையாளர்களின் கேள்வியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் அஸ்வின்....!
பத்திரிகையாளர்களின் கேள்வியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் அஸ்வின்....!
Advertisement