டிஎன்பிஎல்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சு!

Updated: 22 July 2019 11:22 IST

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிவரும் அஸ்வின், இதுபோன்ற பந்துவீசியது பேட்ஸ்மேன் மற்றுமின்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Ravichandran Ashwin
32 வயதான அஸ்வின், டிஎன்பிஎல் போட்டியில் ஒரு கையில் பந்து வீசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். © Twitter

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அவர் வீசிய பந்து வீச்சு பேசுப்பொருளாகியுள்ளது. 32 வயதான அஸ்வின், டிஎன்பிஎல் போட்டியில் ஒரு கையில் பந்து வீசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நடைப்பெற்ற நடப்பு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்தித்தது. இந்த சம்பவம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் மீதமிருக்கையில் 2 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நடந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிவரும் அஸ்வின், இதுபோன்ற பந்துவீசியது பேட்ஸ்மேன் மற்றுமின்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்திலும் பரவி வைரலாகி வருகிறது.

கவுண்டி சாம்பியன்ஷிப் பிரிவு ஒன்றில் நாட்டிங்ஹாம்ஷையருக்காக இடம்பெற்ற பிறகு டி.என்.பி.எல். போட்டிகளில் இடம்பெற்றார். மூன்று போட்டிகளில் 20 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

ஐபிஎல் போட்டியில் ஜாஸ் பட்லரை அஸ்வின் 'மான்கடிங்' முறையில் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் மாதம், அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார். 2017ம் ஆண்டு தான் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கடைசியாக ஆடினார்.

இதுவரை அஸ்வின், 65 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அதிக ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடி இதுவரை 342 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 7/59 தான் அவரின் சிறந்த விக்கெட் கீப்பிங்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நித்யானந்தா கண்டுபிடித்ததாக சொல்லப்படும் நாட்டுக்கு
நித்யானந்தா கண்டுபிடித்ததாக சொல்லப்படும் நாட்டுக்கு 'விசா' கேட்டுள்ள ரவிசந்திரன் அஸ்வின்!
இம்ரான் தாஹிரை போல் கொண்டாத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்!
இம்ரான் தாஹிரை போல் கொண்டாத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
IndiavBan: சனத் ஜெயசூரியாவின் பந்து வீச்சு முறையை பின்பற்றும் அஸ்வின்!
IndiavBan: சனத் ஜெயசூரியாவின் பந்து வீச்சு முறையை பின்பற்றும் அஸ்வின்!
பத்திரிகையாளர்களின் கேள்வியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் அஸ்வின்....!
பத்திரிகையாளர்களின் கேள்வியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் அஸ்வின்....!
Advertisement