சர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்

Updated: 18 June 2019 13:17 IST

எம்சிசி யங் கிரிக்கெட்டர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையின் புகழை தக்க வைக்கும் விதமாக சிறப்பாக ஆடி வருகிரார்.

Arjun Tendulkar Dismisses Surrey 2nd XI Batsman With Raw Pace. Watch
அர்ஜுன் தனது முதல் விக்கெட்டை சென்ற வருடம் ஜூலையில் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிராக வீழ்த்தினார். © Twitter

19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் செகண்ட் லெவன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது தடத்தை பதித்துள்ளார். சர்ரே பேட்ஸ்மேன் நாதன் டெய்லியை வீழ்த்தி தனது அபார பந்துவீச்சை பதிவு செய்தார். எம்சிசி யங் கிரிக்கெட்டர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையின் புகழை தக்க வைக்கும் விதமாக சிறப்பாக ஆடி வருகிரார். 4 ரன்கள் எடுத்திருந்த டெய்லியை போல்டாக்கி வெளியேறினார் அர்ஜுன் டெண்டுலகர். 

இந்த விக்கெட்டை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவு செய்துள்ளது. 
அர்ஜுன் டெண்டுலகர், இந்தப் போட்டியில் 50 ரன்களை விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 11 ஓவர்கள் வீசிய அவர் 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார். 

எனினும் இந்த 11 ஓவர்களில் 4 நோபால்களை வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர்.

சர்ரே, செகண்ட் லெவன் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை குவித்துள்ளது. எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் தற்போது 227 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

அர்ஜுன் தனது முதல் விக்கெட்டை சென்ற வருடம் ஜூலையில் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிராக வீழ்த்தினார்.

அர்ஜுனின் தந்தை சச்சின் 16 வயதில் 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
சர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
தனது முதல் டெஸ்ட் போட்டியில்
தனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்!
அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்!
அண்டர் 19க்கான  இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்
அண்டர் 19க்கான இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்
Advertisement