பேட்டால் ஸ்டம்பை இடித்து கோவத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!

Updated: 29 April 2019 15:50 IST

233 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த மும்பை அணி, 12 ரன்களில் ரோஹித் ஷர்மா,  ஹாரி கர்னேவால் அவுட் ஆக்கப்பட்டார்.

KKR vs MI: Rohit Sharma Hits Stumps With Bat After Being Given Out LBW. Watch
மும்பை அணியின் கேப்டன் கூல் பொறுமையை இழந்ததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. © Twitter

ரோஹித் ஷர்மா, எப்போதும் ஃபீல்டில் அமைதியாக இருக்கக் கூடியவர். பெரும்பாலும், அம்பயர் எடுக்கும் முடிவுகளிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்பவர். ஞாயிறன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி ஈடன் கார்டன்ஸில் நடந்தது. அந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் கூல் பொறுமையை இழந்ததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 233 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த மும்பை அணி, 12 ரன்களில் ரோஹித் ஷர்மா,  ஹாரி கர்னேவால் அவுட் ஆக்கப்பட்டார். அம்பயர் எல்பிடபள்யூ கொடுத்து அவுட் என அறிவித்தார். பின்னர், அம்பயரின் முடிவு ரிவ்யூ செய்யப்பட்டது. அவுட் இல்லாமல், டிஆர்எஸ் முடிவு அம்பயரின் முடிவாக அமைந்தது.

அம்பயர், அவுட் இல்லை என அறிவித்திருந்தால் ரோஹித் அவுட் ஆகாமல் இருந்திருப்பார். அம்பயரின் முடிவு  ரோஹித் ஷர்மாவுக்கு மகிழ்ச்சி அளிக்காததால், அம்பயர் முன்பு இருந்த ஸ்டம்புகளை தன் பேட்டால் இடித்து, கோவத்தை வெளிப்படுத்தினார். இப்படி நடந்து கொண்டதால், அவருக்கு போட்டியின் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மாவும் அபராதத்தை ஏற்றுகொண்டார்.

"கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான ரோஹித் ஷர்மா அம்பயர் முடிவை ஏற்றுகொள்ள முடியாமல், நடந்துகொண்டதால் 15 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது" என ஐபிஎல் ஊடக ஆலோசகர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 34 பந்தில் 91 ரன்கள் எடுத்தார். இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடைசியில், கொல்கத்தா அணி ஆறு தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. இதனால், ப்ளேஆஃபில் நுழையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
Advertisement