''பைலட் ஆகவே ஆசைப்பட்டேன்'' இந்திய துவக்க வீரர் மயன்க் அகர்வால்!

Updated: 05 January 2019 14:00 IST

"கர்நாடக அணிக்காக ஆடிய பின்பு கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தினேன்" என்றார் மயன்க் அகர்வால்

India vs Australia: Mayank Agarwal Says He Was Fascinated By Aeroplanes As A Child, Wanted To Become A Pilot
27 வயதான மயன்க் அகர்வால் கர்நாடக அணிக்காக ரஞ்சி போட்டிகளில் 3700க்கும் அதிகமான ரன்களை குவித்தவர் © AFP

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தடுமாற்றமாக பார்க்கப்படுவது துவக்க வீரர்கள் தான். முதல் இரண்டு டெஸ்ட்டில் விஜய், ராகுல் இணை சொதப்பியதால் மயன்க் அகர்வால் மற்றும் விஹாரி மூன்றாவது டெஸ்ட்டில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். மயன்க் அகர்வால் மூன்றாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

27 வயதான மயன்க் அகர்வால் கர்நாடக அணிக்காக ரஞ்சி போட்டிகளில் 3700க்கும் அதிகமான ரன்களை குவித்தவர். அவரது சராசரி 50.22. அவர் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியான மெல்பெர்ன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 76 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்களும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். குறிப்பாக, இரண்டவது இன்னிங்ஸில் டாப் ஆர்டர் 40 ரன்னுக்குள் சுருண்ட போது மயன்க் மட்டும் நின்று சிறப்பாக ஆடினார்.

பிசிசிஐ-யில் வெளியான மயன்க் அகர்வாலின் பேட்டியில் ''சிறுவயதில் நான் விமானங்களை ஓட்ட வேண்டும் என்றும், விமானியாக வேண்டும் என்றும் விருப்பினேன். அதற்காக அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினேன்'' என்றார்.

மேலும், "கர்நாடக அணிக்காக ஆடிய பின்பு கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தினேன். நான் கிரிக்கெட் மட்டும் தான் ஆடுவேன், வேறு எதுவும் செய்ய மாட்டேன் என்றெல்லாம் கூறவில்லை. எனது பெற்றோர்கள் என்னை என் விருப்பத்துக்கு செயல்பட விட்டார்கள்" என்றார்.

"இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி மெல்பெர்ன் டெஸ்ட்டுக்கு முன் இதுதான் உனது அறிமுக டெஸ்ட் என்ற போது சில நொடிகள் உறைந்து போய் நின்றேன்" என்றார் மயன்க். 

மயன்க் அகர்வால் தற்போது நடந்து வரும் கடைசி டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் 77 ரன் குவித்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணியினருடன்
இந்திய அணியினருடன் 'போட் பார்ட்டி' கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
Advertisement