ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!

Updated: 05 September 2019 14:37 IST

நடந்துகொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் ஐந்தாவது முறையாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிடம் ஆட்டமிழந்துள்ளார்.

David Warner Gets Mocked By ICC As Dismal Run Against Stuart Broad Continues
ஆஸ்திரேலிய அணிக்காக 78 டெஸ்ட் தொடரில் வார்னர் இடம்பெற்றுள்ளார். © AFP

நடந்துகொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் ஐந்தாவது முறையாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிடம் ஆட்டமிழந்துள்ளார். மான்செஸ்டரில் நடக்கும் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தார் வார்னர். ஆஷஸ் 2019 இல் ஃபார்மில் இல்லாத டேவிட் வார்னர், ஸ்டூவர்ட் பிராட் மூலம் பலமுறை சிக்கலில் சிக்கியுள்ளார், அவரை வெளியேற்றுவதற்கான வழியைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார். ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ட்விட் செய்துள்ளது. அதில், "டேவிட் வார்னர் ஸ்டூவர்ட் பிராட் உடனான தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்குகிறார்... #Ashes" என்று பதிவிட்டது. மான்செஸ்டரில் முதல் ஓவரிலேயே வார்னர் ஆட்டமிழந்ததால், ஐசிசி ஆஸ்திரேலியா செய்த ட்விட்டுக்கு, ரீட்விட் செய்துதுள்ளது. அதில், "வெகு நேரம் நீடித்துள்ளது #Ashes" என்று ரீட்விட் செய்தது.

ஆஷஸ் 2019ம் ஆண்டில் 2, 8, 2, 5, 61, 0 மற்றும் 0 என்ற ரன்களை எடுத்துள்ளார் வார்னர். அவரின் மோசமான ரன் குவிப்பில், தொடர்ந்து இரண்டு டக் அவுட் ஆகியுள்ளார்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பந்து சேதப்படுத்திய காரணத்துக்காக தடைவிதிக்கப்பட்ட பின்னர் டெஸ்ட் தொடரில் வார்னரின் முதல் போட்டி இதுவாகும். ஆனால், வார்னர் இந்தப் போட்டிகளில் சரிவர செயல்படவில்லை.

78 டெஸ்ட் தொடரில் வார்னர் இடம்பெற்றுள்ளார். அவர் 21 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களின் உதவியுடன் மிக அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் 6442 ரன்களைக் குவித்துள்ளார். இந்த வடிவ போட்டிகளில் அவரின் சராசரி 46.68 ஆக உள்ளது.

இந்தத் தொடரிக் 1-1 என்ற கணக்கில் உள்ளது. ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் செப்டம்பர் 12 முதல் 16 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெறவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
Advertisement