"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்

Updated: 11 September 2019 13:49 IST

உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சிறப்பாக ஆடவில்லை.

David Warner Admitted To Using "Substances" To Deteriorate Condition Of Ball, Reveals Alastair Cook
இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவை விட ஒரு ரன் பின் தங்கியுள்ளார் வார்னர். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக டேவிட் வார்னர் ஒரு வருடம் கிரிக்கெட் ஆடுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கிடம் "ஒருமுறை தான் பந்தை சேதப்படுத்த பொருட்கள் பயன்படுத்தியதாக வார்னர் கூறியுள்ளார்". கார்டியனில் வெளியான நேர்காணலில், குக் 2017-18 ஆஷஸ் தொடரில் நடந்த இந்த சம்பவம் குறித்து தன்னுடைய "சுயசரிதை" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"டேவிட் வார்னர் தன்னுடைய கொண்டாட்டத்தின் போது, முதல் தர போட்டியில், கையிலிருந்த பொருட்கள் வைத்து பந்தை சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். நான் ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்தேன். அவர் ' ஓ அதை நீங்கள் சொல்லியிருக்க கூடாது' என்பது போல் பார்த்தார்," என்று குக் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியதிலிருந்து டேவிட் வார்னர், 2019 உலகக் கோப்பை மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் 2019 முழுவதும் கிண்டல்கள் மற்றும் முரட்டுத்தனமான ஸ்லெட்களை சந்தித்து வருகிறார்.

வார்னர் இந்த பிரச்னையெல்லாம் முறியடித்து, உலகக் கோப்பையில் 647 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரை அதிக ரன்கள் குவித்த இரண்டாவது நபராக உள்ளார். இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவை விட ஒரு ரன் பின் தங்கியுள்ளார்.

உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ் ஆடி,  2, 8, 3, 5, 61, 0, 0 மற்றும் 0 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ஆஷஸ் 2019 இன் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி செப்டம்பர் 12 ஆம் தேதி லண்டனின் கென்னிங்டன் ஓவலில் தொடங்குகிறது. 2001ம் ஆண்டு முதல் தோற்காத இங்கிலாந்து அணி, இதில் வெற்றி பெறும் முனைப்போடு ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
இங்கிலாந்து பக்கிங்ஹாம் பேலஸில் சர் பட்டம் பெற்றார் அலெஸ்டர் குக்!
இங்கிலாந்து பக்கிங்ஹாம் பேலஸில் 'சர்' பட்டம் பெற்றார் அலெஸ்டர் குக்!
உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்தை அச்சுறுத்தும் இந்தியா - க்ரீம் ஸ்வான்!
உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்தை அச்சுறுத்தும் இந்தியா - க்ரீம் ஸ்வான்!
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
Advertisement