புதிய விளம்பரத்தில் பேபிசிட்டரான விரேந்தர் சேவாக்!

Updated: 11 February 2019 16:03 IST

சமீபத்தில் வெளியான விளம்பரத்தில் ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர்

India vs Australia: Virender Sehwag Turns Babysitter In New TV Advertisement. Watch
சேவாக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக நடித்த விளம்பரம் வைரலாகியுள்ளது. © Screengrab/YouTube

விரேந்தர் சேவாக்கின் ட்விட்டுகள் அடிக்கடி வைரலாகும். அதேபோல தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக நடித்த விளம்பரம் வைரலாகியுள்ளது. பிப்ரவரி 24ம் தேதி துவங்கவுள்ள இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடருக்கான விளம்பரத்தில் சேவாக் நடித்துள்ளார். ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளுக்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விளம்பரத்தில் ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர்.  குழந்தைகளுடன் பேபி சிட்டராக வலம்வருவதாக படமாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பேபிசிட்டர் ஜோக்குகள் பிரபலமாகின. ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், இந்திய கீப்பர் ரிஷப் பண்ட்டை தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ள பேபிசிட்டராகிராயா என்று வம்பிழுத்தார். பின்னர் ஒரு சந்திப்பில் பெய்னின் மனைவியுடன் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருந்த பன்ட்டின் படம் இணையத்தில் வைரலானது. பேபிசிட்டர் புகைப்படங்கள் இந்திய ஆஸ்திரேலிய தொடரை சுவாரஸ்யமாக்கின.

மேலும் பன்ட்டை பார்த்து ஹரிக்கேன் அணிக்கு பரிந்துரை செய்கிறேன். தோனி வந்துவிட்டால் உனக்கு வேலை இருக்காது என்று சொல்ல அதுவும் சர்ச்சையானது. பிறகு ரோஹித் ஷர்மாவும் பேபிசிட்டருக்கு பன்ட்டை அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • டிவி விளம்பரத்தில் பேபிசிட்டரான சேவாக்
  • இந்திய-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான தொடர் பிப்ரவரி 24ம் தேதி துவங்குகிறது
  • கடந்த டிசம்பர் மாதம் பேபிசிட்டர் ஜோக்குகள் வைரல் ஆகின
தொடர்புடைய கட்டுரைகள்
''பலியான 40 வீரர்களின் குழந்தைகளுடைய படிப்பு செலவை ஏற்கிறேன்'' - சேவாக் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்திய கேப்டன் கோலி கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்திய கேப்டன் கோலி கண்டனம்!
''பேட்டிங்கோ...பேபிசிட்டரோ நீங்கள்தான் இன்ஸ்ப்ரேஷன்'' சேவாக்கை புகழ்ந்த ரிஷப் பன்ட்
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
Advertisement