"நியூசிலாந்து ட்ரிப்... டெல்லி டின்னர்" - கோலி அனுஷ்காவின் காதலர் தின பகிர்வு!

Updated: 15 February 2019 11:37 IST

மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கொண்டாடிய காதலர் தினப் புகைப்படங்கள் பகிர்ந்தார் விராட் கோலி.

Virat Kohli, Anushka Sharma Valentine
கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோலி அனுஷ்கா செல்ஃபிக்களை பறக்க விட்டனர். © Twitter

இந்திய கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் திருமணமாகி தங்களது இரண்டாவது காதலர் தினத்தை, டெல்லியில் கோலிக்கு சொந்தமான நூவா ஹோட்டலில் டின்னருடன் கொண்டாடினர். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் கோலி "எனது காதலியுடன்" என்று பகிர்ந்திருந்தார்.

அதேபோல அனுஷ்காவும் கோலியுடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை அழகான பதிவுடன் பகிர்ந்திருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோலி அனுஷ்கா செல்ஃபிக்களை பறக்க விட்டது அனைத்துமே வைரல் ரகம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About last night with my valentine . #greatmeal #nueva #loveit @anushkasharma @nueva.world

A post shared by Virat Kohli (@virat.kohli) on

நியூசிலாந்து தொடரின் போது ஆட்டம் நடக்கும் மைதானங்களிலும் அனுஷ்காவை காண முடிந்தது.

நியூசிலாந்து தொடரில் கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.

ஓய்வுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு திரும்பிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி சமீபத்தில் ஐசிசியின் அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைத்தார். சர் கேரி சோபர்ஸ் விருது. ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர், ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுகளை ஒருசேர வென்றார்.

மேலும் 2018ம் ஆண்டுக்கான ஐசிசியின் கனவு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கோலிதான் கேப்டன்.

2018ல் கோலி 13 டெஸ்ட்களில் 1322 ரன்களையும், 14 ஒருநாள் போட்டிகளில் 1202 ரன்களையும் குவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது
  • விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் புகைப்படங்கள் பகிர்ந்தனர்
  • விராட் கோலி, ஐசிசியின் மூன்று விருதுகளையும் ஒருசேர வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
Advertisement