‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!

Updated: 19 August 2019 16:10 IST

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, 794 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

Virat Kohli
இந்தியர்களைப் பொறுத்தவரை கோலியைத் தவிர, டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், டெஸ்ட் நிபுணர் செத்தேஷ்வர் புஜாரா இருக்கிறார். © Twitter/BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது அந்த இடத்தைத் தட்டிப் பறிக்கும் நோக்கத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். 2019 ஆஷஸ் தொடரில் ஸ்மித், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் ஆஷஸ் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட்டில் அரைசதம் அடித்தார். 

விராட் கோலி, 922 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கிப் பின்னர் 913 புள்ளிகளுடன் ஸ்மித், 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இடத்தில் 887 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி, டெஸ்ட் தொடரை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் கோலி விளையாட இருக்கிறார். 

இந்தியர்களைப் பொறுத்தவரை கோலியைத் தவிர, டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், டெஸ்ட் நிபுணர் செத்தேஷ்வர் புஜாரா இருக்கிறார். அவர் 881 புள்ளிகளுடன் 4வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, 794 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார். லார்ட்ஸ் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பேட் கம்மின்ஸ், 914 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, 3வது இடத்தில் இருக்கிறார். அணிகள் பட்டியலில் இந்தியா, முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து, இரண்டாவது இடத்திலும் தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்திலு நிலை கொண்டுள்ளன. 

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்
  • அவருக்குப் பின்னர் 2வது இடத்தில் ஸ்மித் இருக்கிறார்
  • 3வது இடத்தில் கேன் வில்லியம்சன் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
Advertisement