விராட் கோலியை ட்விட்டரில் விமர்சித்த ஆஸ்திரேலிய ஜர்னலிஸ்ட்!

Updated: 24 December 2018 11:12 IST

விராட் கோலியின் ஸ்லெட்ஜிங் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றது.

India vs Australia: Virat Kohli
இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கோலியின் ஆக்ரோஷத்தை விமர்சித்துள்ளார். © AFP

விராட் கோலியின் கள ஆக்ரோஷம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் வீடியோ ஜர்னலிஸ்ட் டென்னிஸ் ஃப்ரிட்மேன் தனது ட்விட் மூலம் கோலியை விமர்சித்துள்ளார். 

தனது ட்விட்டில், உள்ளூர் கிரிக்கெட்டில் ஒருவர் பேட்ஸ்மேனுக்கு, எதிர்முனையில் அவசரப்பட்டு க்ரீஸை கடந்து பந்துவீச்சாளரால் அவுட் செய்யப்படுவார். பின்னர், தனது பேட்டை மைதானத்தில் அடித்து உடைப்பது போன்ற வீடியோவை பதிவிட்டு "களத்தில் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று விராட் வெளிப்படுத்துகிறார்'' என்று பதிவிட்டிருந்தார்.

இரு அணிகளுக்கு இடையேயான தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் கோலி - டிம் பெய்ன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல விமர்சகர்களால் இந்தச் சம்பவம் விமர்சிக்கப்பட்டது. விராட் கோலியின் ஸ்லெட்ஜிங் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றது.

இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கோலியின் ஆக்ரோஷத்தை விமர்சித்துள்ளார். ஆனால், ஆலன் பார்டர், ப்ராட் ஹாக் என ஆஸ்திரேலிய வீரர்களும், பாகிஸ்தான் வீரர் அக்தர் ஆகியோர் இந்திய கேப்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், 

இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்பெர்னில் துவங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement