Virat kohli, Virat kohli funny reaction, Virat kohli reaction, Virat kohli captain, indian captain Virat kohli, india v south africa, Gully Boy, BCCI BCCI post
Listen to the latest songs, only on JioSaavn.com
 

விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!

Updated: 22 October 2019 10:58 IST

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் இருந்து இந்திய கேப்டனின் ஒரு செய்கை வைரலாகியுள்ளது.

Virat Kohlis Funny Reaction Invites Gully Boy Response On BCCIs Post
இது இந்தியாவின் 11 வது டெஸ்ட் தொடர் சாதனை வெற்றியாகும். © Twitter

விராட் கோலி ஒருபோதும் களத்தில் தனது குறும்பு தனமான வெளிப்பாடுகளால் இணையத்தை கவர்ந்திழுக்கத் தவறவில்லை, ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் இருந்து இந்திய கேப்டனின் ஒரு செய்கை வைரலாகியுள்ளது. இந்திய கேப்டனின் வேடிக்கையான புகைப்படத்தை தலைப்பிடுமாறு ரசிகர்களைக் கேட்டு பிசிசிஐ படத்தை ட்விட்டரில் வெளியிட்டது. விராட் கோலியின் வேடிக்கையான புகைப்படம் விரைவில் வைரலாகி, பலர் அவரது உடல் தோரணையை 'கல்லி பாய்' படத்தின் ராப் பாடலுடன் தொடர்புபடுத்தினர். 

இதற்கிடையில், சில ரசிகர்கள் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கோலியின் படம் மூலம் ட்ரோல் செய்ய தவறவில்லை.

சில ரசிகர்கள் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா நடித்த படங்களான 'பரி' மற்றும் 'பாம்பே வெல்வெட்' போன்றவற்றை கேலி செய்தனர்.

கோலி தற்போது ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டில் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்தியா, ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வென்றது மற்றும் ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் வைட் வாஷை எதிர்நோக்கி உள்ளது.

இது இந்தியாவின் 11 வது டெஸ்ட் தொடர் சாதனை வெற்றியாகும்.

கோலியின் தலைமையின் கீழ், ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும், நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

பல போட்டிகளில் நான்கு டெஸ்ட் வெற்றிகளில் இருந்து 200 புள்ளிகளுடன் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் 60 புள்ளிகளுடன் உள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த இரண்டு போட்டிகளின் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
“இதயம் நொறுங்கிப் போனது” - நிவாரண நிதிக்கு ஆதரவளிக்கும் கோலி மற்றும் அனுஷ்கா!
“இதயம் நொறுங்கிப் போனது” - நிவாரண நிதிக்கு ஆதரவளிக்கும் கோலி மற்றும் அனுஷ்கா!
Advertisement