"பாட்டில் கேப் சேலஞ்ச்" - மீண்டும் தொடங்கியுள்ள விராட் கோலி!

Updated: 12 August 2019 15:40 IST

விராட் கோலி இந்த வீடியோவுக்கு, "செய்யாமல் இருப்பதை விட லேட்டாக செய்தால் பரவாயில்லை" என்று பதிவிட்டு, மற்ற வீரர்களையும் இந்த சேலஞ்சை செய்ய சொல்லியுள்ளார்.

Virat Kohli
விராட் கோலி 'பாட்டில் கேப் சேலஞ்ச்' ஒன்றை வித்தியாசமாக செய்து வீடியோவை பதிவிட்டுள்ளார். © Twitter

விராட் கோலி 'பாட்டில் கேப் சேலஞ்ச்' ஒன்றை வித்தியாசமாக செய்து வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாட்டில் கேப் சேலஞ்ச் செய்யும் போது, ரவி சாஸ்திரியின் கமெண்டரி பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. விராட் கோலி இந்த வீடியோவுக்கு, "செய்யாமல் இருப்பதை விட லேட்டாக செய்தால் பரவாயில்லை" என்று பதிவிட்டு, மற்ற வீரர்களையும் இந்த சேலஞ்சை செய்ய சொல்லியுள்ளார். இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லூயில் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 42வது சதத்தை விராட் கோலி கடந்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சவுரவ் கங்குலி, 11,363 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கோலி 238 ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். 

30 வயதான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை கடக்க இன்னும் 7 சதங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டாட்டை கடந்த இந்திய கேப்டன் 26 வயதான சாதனையை முறியடித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட் செய்ய வந்தபோது கோஹ்லி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய ஐந்தாவது ஓவரில் மியாண்டாட்டின் 1930 ரன்களை அவர் ஒரு ரன்னில் முறியடித்தார்

இது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் 34 வது ஒருநாள் போட்டியாகும், அதே நேரத்தில் மியாண்டட் 64 போட்டிகளில் ஆடி இந்த ரன்களைக் குவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கோஹ்லி தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். அவரின் முதல் சதம்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2011ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் ஆதிக்கம் செலுத்தி ஜூலை 2017 முதல் அக்டோபர் 2018 வரை அவர்களுக்கு எதிராக நான்கு ஒன்றுக்கு பின் ஒருன்றாக சதங்களை அவர் அடித்தார்.

முதல் ஒருநாள் போட்டி 13 ஓவர்கள் ஆடிய நிலையில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லூயில் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
Advertisement