"பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்கள்" - விராட் கோலிக்கு ரசிகரின் வேண்டுகோள்

Updated: 10 October 2019 15:49 IST

Pakistan vs Sri Lanka: "விராட் கோலி நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை நாங்கள் காண விரும்புகிறோம்" என்று பாகிஸ்தான் ரசிகர் கூறியுள்ளார்.

Pakistan vs Sri Lanka: Virat Kohli
Pakistan vs Sri Lanka: ஒரு பாகிஸ்தான் நபர் ட்விட்டரில் கோலியை அணுகி, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். © Twitter

விராட் கோலிக்கு இந்தியாவை தவிர உலகத்தின் பல நாடுகளில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவரது பேட்டிங் பாணியை நேசிப்பதைத் தவிர, மக்கள் அவரது ஆளுமையையும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பையும் விரும்புகிறார்கள். பலர் அவரை தங்கள் முன்மாதிரியாகக் கருதுகின்றனர். விராட் கோலியின் பெரிய அபிமானியாக இருக்கும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் இது ஒரு பொதுவான பண்பு என்றாலும், ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்தியா கேப்டனின் பெரிய ரசிகராக இருப்பார் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இரு நாடுகளும் பரம எதிரிகளாக இருக்கிறது. இந்தக் கருத்தை சிதைத்து, ஒரு பாகிஸ்தான் நபர் ட்விட்டரில் கோலியை அணுகி, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கையில் போஸ்டர் வைத்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், "விராட் கோலி நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை நாங்கள் காண விரும்புகிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

"@imVkohli  இங்கு வந்து நீங்கள் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களை விரும்புகிறோம், நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன். நிறைய அன்பும் நம்பிக்கையும் #PakVsSri #Lahore #Pakistan," என்று அந்த ரசிகர் புகைப்படத்துடன் பதிவிட்டார்.

இந்த பதிவு பல கருத்துக்களை ஈர்த்தது, சில ரசிகர்கள் அதே உணர்வுகளை எதிரொலித்தனர். மற்றவர்கள் இந்த யோசனையில் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் சில எதிர்மறை கருத்துக்களை வெளியிட்டனர்.

பாகிஸ்தான் Vs இலங்கை வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர் தெற்காசிய நாட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் திரும்பியதைக் குறித்தது. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக இருந்தது, ஏனெனில் அவர்கள் தங்கள் அணி சர்வதேச போட்டிகளை சொந்த நாட்டில் விளையாடுவதை காணமுடிவதில்லை.

பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் ரசிகர்களை ஏமாற்றவில்லை. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இருப்பினும், சொந்த நாட்டு வீரர்கள் விளையாட்டின் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதே செயல்திறனை உருவாக்கத் தவறிவிட்டனர் மற்றும் தொடரை இழந்தனர். இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளது.

சுற்றுப்பயணத்தின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை 147/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இருப்பினும், பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் இலக்கை துரத்த தடுமாறி 20 ஓவர்களில் 134/6 மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை 13 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. தொடரை இலங்கை 3-0 என்ற கணக்கில் வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
Advertisement