திறப்பு விழாவின் போதே சேதமடைந்த விராட் கோலியின் மெழுகுச்சிலை!

Updated: 08 June 2018 19:36 IST

கோலியின் மெழுகு சிலை போலவே அருங்காட்சியகத்தில் டேவிட் பெக்காம், மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் சிலைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

Virat Kohli Statue At Madame Tussauds Damaged
© Facebook

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது.

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ரன் விராட் கோலியின் மெழுகு சிலையானது நேற்று திறக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என்னுடைய சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி' எனக்குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சிலை அமைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிலை சிதலம் அடைந்தது. இதை அடுத்து சிலை நிறுவப்பட்ட சில மணி நேரங்களிலேயே பழுது பார்ப்பதற்காக சிலை எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், சிலை மீண்டும் செப்பனிடப்பட்டு அமைக்கப்பட்டு விட்டதாக அருங்காட்சிய நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

கோலியின் மெழுகு சிலை போலவே அருங்காட்சியகத்தில் டேவிட் பெக்காம், மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் சிலைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல் சினிமா நட்சத்திரங்களின் சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
 

Comments
ஹைலைட்ஸ்
  • கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது
  • இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்
  • மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
"ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை" - கேப்டன் விராட் கோலி
"ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை" - கேப்டன் விராட் கோலி
Advertisement