"இளைஞர்கள் அதிக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" - விராட் கோலி!

Updated: 16 September 2019 18:03 IST

2008ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான கோலி தனது சொந்த உதாரணத்தை அளித்து, சர்வதேச கிரிக்கெட் வீரராக தனது ஆரம்ப நாட்களில் ஒரு பெரிய வாய்ப்புகளைப் பெறுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Virat Kohli Wants Youngsters To Make The Most Of Opportunities
டி20 உலகக் கோப்பையைத் தவிர, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் கவனம் செலுத்துகிறது. © AFP

ஞாயிற்றுக்கிழமை, அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி, டி20 உலகக் கோப்பைக்கான சரியான இணையை கண்டுபிடிக்க அணி தயாராகி வருவதால் சர்வதேச அளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது குறித்து பேசினார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டத்துக்கு முன்பாக கோலி பேசினார். ஆனால், ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்திய கேப்டன், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டபோது, ​​ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், அதே மனநிலையுடன் இளைஞர்களும் களமிறங்க வேண்டும் என்றும் கூறினார்.

2008ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான கோலி தனது சொந்த உதாரணத்தை அளித்து, சர்வதேச கிரிக்கெட் வீரராக தனது ஆரம்ப நாட்களில் ஒரு பெரிய வாய்ப்புகளைப் பெறுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்."டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக எங்களிடம் 30 போட்டிகள் உள்ளன. அணியின் பார்வையில், இது மிகவும் தெளிவாக உள்ளது. நான் அணியில் இணைந்தபோது, 15 வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன். நீங்கள் நான்கு முதல் ஐந்து வாய்ப்புகளைப் பெறுகிறீர்கள், அதை நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதுதான் நாம் விளையாடும் நிலை," என்று கோலி பிசிசிஐ டிவியில் கூறினார்.

"அணிக்கு நிச்சயமாக அந்த மனநிலை இருப்பதால், வரும் நபர்கள் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் தான் கிடைக்கும் என்ற மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் வாய்ப்பை சரியாக பயன்படுத்திறார்களோ, அவர்களுக்கு வாய்ப்பு எளிதாக அமையும். இதை தேர்வு செய்வது கடினம் தான். ஆனால், 30 வாய்ப்புகள் உள்ளது," என்றார் கோலி.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையைத் தவிர, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் கவனம் செலுத்துகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் ஸ்பின்னர்களாகிய குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இருவரும் இணைக்கப்படாமல், இளம் வீரர்களான ராகுல் சஹார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரேயால் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரையும் தேர்வுக்குழு இணைத்துள்ளனர்.

"உலகக் கோப்பைக்கு முன்னதாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும், அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லும் வீரர்களை கண்டுபிடிக்க வேண்டும்," கோலி கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
Advertisement