வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!

Updated: 21 November 2019 21:06 IST

ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த முகம்மது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளிலும் இவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.

Virat Kohli To Lead India
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமனம் © AFP

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக விராட்கோலி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த முகம்மது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளிலும் இவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று இடது கை பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர்.

வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிவம் துபே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த சில சீரிஸ்களில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த கேதர் ஜாதவ் ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

இதேபோன்று ஆல் ரவுண்டர் ரவிந்திரா ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே ஆகியோரும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2 சீரிஸ்களில் ஜொலிக்கத் தவறிய க்ருணல் பாண்டியாவுக்கு தற்போது அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இடம்பெறாத கே.எல். ராகுலுக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்…

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ரவிந்திரா ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி.

ஒருநாள் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்…

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரவிந்திரா ஜடேஜா, ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, தீபக் சஹார், புவனேஸ்வர் குமார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 20 ஓவர் போட்டிகளில் அணிக்கு மீண்டும் கேப்டனாக திரும்பியுள்ளார் விராட்.
  • ஷமி, புவனேஸ்வர் குமாரும் 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் உள்ளனர்
  • இந்தியாவில் வெ.இ. கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
Advertisement