
விராட் கோலி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தனது கருத்தை என்டிடிவியின் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், "விராட் கோலி ஒரு அணியின் சிறந்த தலைவன். ஆனால் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் கேப்டன் அல்ல" என்று கூறியுள்ளார். கேப்டன்ஸிக்கும், அணியின் தலைவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அணியை வழிநடத்தும் சிறந்த தலைவன் விராட் கோலி. அதனால் தான் இந்தியா வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவிக்கிறது. ஆனால் பெய்ன் மற்றும் வில்லியம்சன் ஆகிய இருவரும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் சிறந்த கேப்டன்கள். உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்தை கணித்துள்ளார் ஷேன் வார்னே.
உலகக் கோப்பையில் தோனியின் பங்களிப்பு குறித்தும் வார்னே தெரிவித்தார். "தோனி சூழலுக்கு ஏற்ப 4,5,6 ஆகிய இடங்களில் ஆடலாம். அவரது அனுபவம் அணிக்கு கைகொடுக்கும். கண்டிப்பாக அணியில் அவர்தான் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும்" என்றார். கோலி, ரோஹித், தோனி பேட்டிங்கிலும், பும்ராஹ், புவி இருவரும் பந்துவீச்சிலும் அணிக்கு உலகக் கோப்பையில் உதவுவார்கள் என்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறிய வார்னே, ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் அணிக்கு திரும்பும்பட்சத்தில் ஸ்டோனின்ஸ், ஷார்ட், ஷான் மார்ஷ், ஸ்டார்க், கம்மின்ஸ், மேக்ஸ்வெல் என உலகின் சிறந்த வீரர்களுடன் களமிறங்கினால் வெற்றி வசப்படும். உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும் என்றார்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்கும் வார்னே, பிங்க் ஜெர்ஸி சீசன் குறித்து கருத்து தெரிவுத்துள்ளார்.
புற்றுநோய் அமைப்பில் இணைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் விழிப்புணர்வுக்காக இந்த சீசனில் பிங்க் நிற உடையில் களமிறங்கும் என்றார்.
சஞ்சு சாம்சன், உனக்டட், ஷ்ரேயாஸ் கோபால், கவுதம் ஆகியோரை பாராட்டினார் வார்னே.
ரஹானே, திரிபாதி, பட்லர், சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டோக்ஸ் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த வார்னே, ராஜஸ்தான் ஃபைனலுக்கு முன்னேறும் என்றார்.