பாராட்டிய கோலி... பற்ற வைத்த பன்ட்... தோனியின் டின்னர் சுவாரஸ்யங்கள்!

Updated: 07 March 2019 19:46 IST

மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Virat Kohli Thanks MS Dhoni For "Perfect Team Evening"
ஃபார்ம் ஹவுஸில் தோனியும், அவரது மனைவியும் வீரர்கள் அனைவருக்கும் டின்னர் வழங்கினர்.  © Twitter

தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி ராஞ்சி சென்றது. அப்போது கார் பிரியரான தோனி தனது காரில் அணி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார். இதன் வீடியோவை பிசிசிஐ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பின்னர் தோனியும், அவரது மனைவியும் வீரர்கள் அனைவருக்கும் டின்னர் வழங்கினர். 

மேலும், இந்திய வீரர்கள் பலரும்  தனது சமூக வலைதள பக்கங்களில் தோனியை பாராட்டியுள்ளனர். 

கேப்டன் கோலி ''தோனியின் வீட்டுக்கு சென்றிருந்தோம். அருமையான உணவு. வீரர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தோம். இது அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது'' என்றார்.

சாஹல் தனது ட்விட்டர் பக்கத்தில் செல்ஃபியுடன் "தோனி அண்ணனுக்கும், சாக்‌ஷி அண்ணிக்கும் நன்றி" என்று பதிவிட்டிருந்தார். 

பன்ட் '' எங்கள் பிட்னஸை இவர் மறக்கடிக்கிறார்" என்று சாக்ஷியை குறையாக சொல்வது போல் நகைச்சுவையாக ட்விட் செய்திருந்தார்.

முன்னதாக முதல் போட்டியில் 72 பந்தில் 59 ரன்களை குவித்த தோனி ஒரு புதிய சாதனையையும் படைத்தார். 412 முதல் தர ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 13,000 ரன்களை கடந்தார். இந்த சாதனையை எட்டும் நான்காவது இந்தியர் இவராவார். சச்சின், கங்குலி, ட்ராவிட் மட்டுமே இவருக்கு  முன் இந்த சாதனையை செய்துள்ளனர்.

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் 59 ரன்களையும், இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகியும் வெளியேறினார் தோனி. மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது.

அடுத்த இரண்டு போட்டிகள் முறையே மொகாலி மற்றும் டெல்லியில் நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி தனது காரில் அணி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார்
  • மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது
  • வீரர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
Advertisement