"ஒருதடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்" - ஓய்வு பற்றி கோலி

Updated: 21 January 2019 19:10 IST

ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் இருவரும் ஓய்வுக்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடுகிறார்கள்.

India vs Australia: Virat Kohli Talks About Life After Retirement
30 வயதான கோலி விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. © AFP

இந்திய கேப்டன் விராட் கோலி, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த  பேட்ஸ்மேனாக உள்ளார். 30 வயதான கோலி விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோலி, ஓய்வு பெறும் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

கோலி பேசும்போது ''நான் ஓய்வு பெற்றுவிட்டால் திரும்பவும் பேட்டை கையில் எடுக்கமாட்டேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மீண்டும் வந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட மாட்டேன். ஒருமுறை முடிவு செய்தால் அவ்வளவுதான்'' என்றார்.

"இதே கருத்தை எதிர்காலத்திலும் சொல்வேனா என்று தெரியாது. நான் ஓய்வு பெறும் போது நிச்சயம் நான் நிறைய கிரிக்கெட் ஆடியிருப்பேன்" என்றார்.

ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் இருவரும் ஓய்வுக்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடுகிறார்கள். ஆனால், நான் ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் ஆடமாட்டேன்" என்றும் அறிவித்தார்.

இதே சந்திப்பில் ஹர்திக் பாண்ட்யா பற்றிய கேள்விக்கு "இந்திய அணி வீரர்களாக இதை எப்போதும் நாங்கள் ஏற்க மாட்டோம். அது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
Advertisement