7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!

Updated: 03 September 2019 19:08 IST

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறனை பார்த்து, ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

Virat Kohli Takes Autograph of 7-Year-Old Fan, Leaves Anushka Sharma Amused. Watch
இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. © Twitter

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறனை பார்த்து, ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும், விராட் கோலி தன்னுடைய இளம் ரசிகர் ஒருவரிடம் ஆட்டோகிராஃப் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. "இருங்கள்! எனக்கு அவருடைய ஆட்டோகிராஃப் வேண்டும்," இன்னொரு இளம் வீரர் தன்னிடம் ஆட்டோகிராஃப் கேட்ட போது விராட் கோலி இதை வீடியோவில் கூறினார். "இதை பாருங்கள்! அழகாக உள்ளது," ஆட்டோகிராஃப் வாங்கிய பிறகு இந்தியன் கேப்டன் கூறினார். விராட் கோலியின் மனைவி, அனுஷ்கா ஷர்மா, இந்த வீடியோ முழுவதும் சிரிப்புடனே இருந்தார்.

"என்னுடைய ஏழு வயது உறவினர் மகன், முதல் டெஸ்ட்டின் போது ஜமைக்காவில் இருந்தார், அப்போது விராட் கோலியிடம் @imVkohli சென்று, "அதற்கு பதிலாக எனது ஆட்டோகிராப் விரும்புகிறீர்களா?" இதை கேட்ட விராட் கோலி நின்றார். உடன் அனுஷ்காவும் நின்றார்," வீடியோவுக்கு கேப்ஷன் எழுதப்பட்டது.

உலக டெஸ்ட் தரவரிசையில் இருக்கும் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த வெற்றி மூலம், தோனியின் 27 டெஸ்ட் வெற்றிகளை முறியடித்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தேசிய அளவில், தோனி தலைமையில் 60 டெஸ்ட் போட்டிகளில் 27 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது இந்தியா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றிக்கு முன்பாக விராட் கோலி 26 டெஸ்ட் போட்டிகளை வென்றிருந்தார்.

இந்த வெற்றிக்கு பிறகு, வெளிநாடுகளில் கேப்டனாக கங்குலியின் வெற்றியை விராட் கோலி முறியடித்துள்ளார்.

கோலி , 28 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளார். நீண்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்திய கேப்டனால் அதிக வெற்றி இதுவாகும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
Advertisement