டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!

Updated: 10 October 2019 15:51 IST

50 டெஸ்ட் போட்டிகள் வழிநடத்திய இரண்டாவது கேப்டன் என்ற சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தியுள்ளார் விராட் கோலி.

Virat Kohli Surpasses Sourav Ganguly
முன்னாள் கேப்டன் கங்குலி, 2000 முதல் 2005 வரை 49 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்தியுள்ளார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை விராட் கோலி வழிநடத்தியபோது, 50 டெஸ்ட் போட்டிகள் வழிநடத்திய இரண்டாவது கேப்டன் என்ற சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தியுள்ளார். முன்னாள் கேப்டன் கங்குலி, 2000 முதல் 2005 வரை 49 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்தியுள்ளார். இந்தியாவை 50 போட்டிகளுக்கு மேல் வழிநடத்திய ஒரே கேப்டன் தோனி. அவர் இந்திய அணியை 2008 முதல் 2014 வரை 60 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் சாதனையை குறிப்பிட்ட பிசிசிஐ, " தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் களத்தில் இறங்கும்போது @imVkohliக்கு டெஸ்ட் கேப்டனாக இது போட்டி எண் 50 ஆக இருக்கும், வாழ்த்துகள் கேப்டன்!" என்று பதிவிட்டது.

58 வெற்றி சதவிகிதத்துடன் கோலி இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உள்ளார். 2014 முதல் இந்தியாவை 29 வெற்றிகளுக்கு இட்டுச் சென்றுள்ளார். தோனி இந்தியாவை 60 போட்டிகளில் இருந்து 27 வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார். கங்குலி தலைமைக்கு கீழ் இந்தியா 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 109 போட்டிகளில் இருந்து 53 வெற்றிகளுடன் கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார், ரிக்கி பாண்டிங் (48).

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் வெற்றியில் இருந்து 120 புள்ளிகளைப் பெற்றது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்றது. இந்த வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 160 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதிப்படுத்த உதவியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 19 தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
Advertisement