சர்ச்சையை கிளப்பும் டிஆர்எஸ் - கோலி தன் ஆதங்கத்தை பதிவு செய்தார்

Updated: 11 March 2019 12:12 IST

டர்னர் சரவெடியால் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Virat Kohli Slams "Inconsistent" DRS After Australia Pull Off Stunning Upset In Mohali
டிஆர்எஸ் குறித்து தன் கருத்தை விராத் கோலி பதிவு செய்தார் © AFP

நேற்று மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில், தவான் 143 ரன்களும் ரோஹித் சர்மா 95 ரன்களும் குவித்தனர். இந்தியா அணி, 50 ஓவர்களில் 358 ரன்கள் குவித்தது.

359 எடுத்தால் வெற்றி என கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. பின்ச், ஷான் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், கவாஜா மற்றும் ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோரியின் அற்புதமான பார்ட்னர்ஷிப்னால் இலக்கை நோக்கி முன்னேறியது ஆஸ்திரேலியா அணி. முக்கியமான தருணத்தில் ஹாண்ட்ஸ்கோம்ப் 117 ரன்களில் அவுட் ஆக, டர்னர் சரவெடியால் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இந்தியா அணியின் பீல்டிங் படு மோசமாக இருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எளிதான பல வாய்ப்புகளை கோட்டை விட்டார்.

இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும் போது, 44 -வது ஓவரில் டர்னர் 41 ரன்களில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, டர்னர் பேட்டின் விளிம்பில் பந்து பட்டு, விக்கெட்கீப்பரிடம் கேட்ச் ஆனதாக இந்தியா அணி அப்பில் செய்தது. முதல் அம்பயர் நாட் அவுட் கொடுக்கவே, இந்தியா அணி டிஆர்எஸ் கேட்டது.

ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால், முதல் அம்பயரின் முடிவை மாற்றாமல் நாட் அவுட் என்றே மூன்றாம் அம்பயரும் முடிவு வழங்கினார்.

இது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ‘டிஆர்எஸ் முடுவு சர்ச்சையை கிளப்புகிறது. அது சரிவர இல்லை. ஒவ்வோரு போட்டியிலும் இப்படி ஏதாவது சர்ச்சையை டிஆர்எஸ் கிளப்பிகிறது. டர்னர் நாட் அவுட் வழங்கப்பட்டதே இந்த போட்டியின் திருப்புமுனையாகும்' என்றார்.

இந்த போட்டியில், 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்த டர்னர், ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற செய்தார். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி, டெல்லியில் புதன்கிழமை நடக்கவுள்ளது.

 

மேலும் படிக்க - "சச்சின், லாராவை விட கோலி சிறந்தவர்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

Comments
ஹைலைட்ஸ்
  • தவான் 143 ரன்கள் குவித்தார்
  • டர்னர் எதிராக டிஆர்எஸ் கேட்கப்பட்டது
  • 2-2 என சமனிலையில் ஒருநாள் தொடர் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
Advertisement