டி20 பயிற்சியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விராட் கோலி!

Updated: 03 August 2019 11:07 IST

"ரசிகர்கள் முகத்தில் சந்தோஷம் கொண்டுவர கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக தெரியும் #TeamIndia." என்று பதிவிட்டது. இந்திய ரசிகர்கள் முக்கியமாக குழந்தைகள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Virat Kohli Signs Autographs And Poses For Photos, Charms Fans Ahead of 1st T20I, Watch
இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை எப்போது பெற தவறியதில்லை. © Twitter

இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை எப்போது பெற தவறியதில்லை. அவர் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது அனைவரும் அறிந்ததே. ரசிகர்கள் விராட் கோலிக்காக சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் பயிற்சியின் போது காத்திருந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி ரசிகர்களை சந்தித்து அனைவருக்கும் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். இந்திய அணி வரும் சனிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டி20 போட்டியில் ஆடவுள்ளது. 

பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலி ரசிகர்களுடன் உரையாடும் வீடியோவை பதிவிட்டது. அந்த வீடியோவுக்கு கீழே, "ரசிகர்கள் முகத்தில் சந்தோஷம் கொண்டுவர கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக தெரியும் #TeamIndia." என்று பதிவிட்டது. இந்திய ரசிகர்கள் முக்கியமாக குழந்தைகள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

மூன்று டி20 போட்டிகள் தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா ஆடவுள்ளது.

முதல் டி20 போட்டிக்கும் முன்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தீவிரமாக ஆடி வருகிறது. பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் கால்பந்தும் ஆடினர்.

வீரர்கள் கால்பந்து ஆடும் புகைப்படத்தை பதிவிட்டு பிசிசிஐ, "இது பந்து விளையாடும் நேரம் #TeamIndia." என்று பதிவிட்டது.

னிக்கிழமை நடக்கவுள்ள டி20 போட்டிக்கு முன்பாக விராட் கோலி ட்விட்டரில் ஒரு புகைப்படத்துடன் "ஸ்குவாட்" என்று எழுதி பதிவிட்டார். இந்தப் புகைப்படத்தில் ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, கலீல் அகமது, ஸ்ரேயாஸ் ஐயர், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விராட் கோலியுடன் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள்: கார்லஸ் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பெல், ஈவின் லிவிஸ், சிம்ரன் ஹெட்மெயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் போவெல், கீமோ பால், சுனில் நரேன், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், அந்தோனி ப்ராம்பெல், ஆன்ரே ரஸல்,கியாரி பிரா

3 டி20 போட்டிக்காக இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
Advertisement