T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்

Updated: 26 September 2019 12:50 IST

விராத் கோலி 11வது இடத்திலும் தவான் 13வது இடத்திலும் உள்ளனர்

Virat Kohli, Shikhar Dhawan Move Up In ICC Rankings After T20I Series vs South Africa
டி20 தொடரில் தவான், கோலி சிறப்பாக விளையாடினர் © AFP

இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது டி20 யில் இந்தியாவும் மூன்றாவது டி20 யில் தென் ஆப்ரிக்கா அணியும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் டி20 1-1 என சமனில் முடிந்தது.  

இந்நிலையில் டி20 க்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராத் கோலி ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். விராத் கோலி 11வது இடத்திலும் தவான் 13வது இடத்திலும் உள்ளனர். டி20 பேட்டிங் தரவரிசையில் டாப் 10 யில் இருக்கும் இந்திய வீரர் ரோஹித் சர்மா 664 புள்ளிகள் பெற்று அலக்ஸ் ஹெல்ஸ் உடன் 8வது இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்கா எதிரான தொடரில் விளையாடாத கே.எல்.ராகுல் 10 வது இடத்தில் உள்ளார்.

இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டி காக், 19 இடங்கள் முன்னேறி 30வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 8 இடங்கள் முன்னேறி 50வது இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஆண்டையில் 668 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடைபெற்றது. இதில் இறுதிபோட்டி மழையால் ரத்தாக பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பங்களாதேஷ் அணியின் முஸ்தப்பிசுர் ரஹ்மான் 9வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் 9வது இடத்திற்கு முன்னேறினர்.

(With ANI inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • மூலம் டி20 1-1 என சமனில் முடிந்தது.
  • ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராத் கோலி ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்
  • வாஷிங்டன் சுந்தர் 8 இடங்கள் முன்னேறி 50வது இடத்தில் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
Advertisement