ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!

Updated: 21 September 2019 15:29 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.

Virat Kohli Shares Picture With Rahul Dravid, Twitter Goes Gaga
மூன்றாவது டி20 போட்டிக்கும் முன்னதாக பெங்களூரில் நடந்த இந்தியாவின் பயிற்சி நேரத்துக்கு ராகுல் டிராவிட் வந்தார். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். விராட் கோலி அவர்கள் இருவரும் கைகுலுக்கும் படத்தைப் பகிர்ந்து, தேசியக் கொடியின் ஈமோஜி மற்றும் ஹேண்ட்ஷேக் மூலம் பதிவிட்டார். எம்.சின்னசாமி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கும் முன்னதாக பெங்களூரில் நடந்த இந்தியாவின் பயிற்சி நேரத்துக்கு ராகுல் டிராவிட் வந்தார். இரண்டு கிரிக்கெட் சிறந்தவர்களின் படத்தைப் பற்றி ரசிகர்கள் பாராட்டினர்.

"இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருடன் கிங்," என்று ஒரு ட்விட்டரில் ஒருவர் கூறினார். "அவரவர் தலைமுறையில் சிறந்தவர்கள்," என்று இன்னொருவர் கூறினார். பலரும் "இரண்டு லெஜண்ட்" என்று ட்விட் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ வெளியிட்ட ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி புகைப்படத்துக்கு பல எதிர்மறை கருத்துக்கள் வந்தன. பிசிசிஐ அந்தப் புகைப்படத்தை "கிரிக்கெட்டில் இரண்டு சிறந்தவர்கள் சந்தித்தபோது" என்று பதிவிட்டது.

ரவி சாஸ்திரியை ராகுல் டிராவிட் உடன் "சிறந்தவர்கள்" என்று பிசிசிஐயின் யோசனை ட்விட்டரில் ரசிகர்கள் மத்தியில் நன்றாக செயல்படவில்லை. மேலும், அவர்கள் தங்கள் கருத்துக்களால் இந்த பதிவை நிரப்பினர்.

இப்போது கோலி, டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிறகு, ""சிறந்த இருவர்" என்று இப்போது சொல்லலாம் " என்று ஒரு ரசிகர் கூறினார்.

இப்போது விராட் கோலி, கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு உள்ளார்.

52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தபோது, ​​இந்திய கேப்டன் கோலி ரோஹித்தை முந்திக் கொண்டு குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார்.

இந்தப் போட்டிக்கு பிறகு, கோலி விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் சராசரி 50க்கு மேல் கொண்டுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
Advertisement