"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!

Updated: 17 September 2019 13:37 IST

சவுரவ் கங்குலி, தோனியின் எதிர்காலம் குறித்து விராட் கோலியும், தேர்வுக்குழுவினரும் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

MS Dhoni Retirement: Virat Kohli, Selectors Should Decide On His Future, Says Sourav Ganguly
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. © AFP

தோனி, தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லை. இதனால், கிரிக்கெட் வட்டாரங்களையும் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தோனியின் எதிர்காலத்தை அவரே தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர். முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தோனியின் எதிர்காலம் குறித்து விராட் கோலியும், தேர்வுக்குழுவினரும் முடிவு செய்ய வேண்டும் என்றார். "தேர்வுக்குழுவினரும், விராட் கோலியும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் முக்கியமானவர்கள். எனவே, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார் சவுரவ் கங்குலி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி வரும் 18ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா வெல்லும் என கங்குலி நம்புகிறார்.

"இந்தியா பிடித்தமான அணி. சொந்த மண்ணில் இந்தியா ஒரு ஆபத்தான அணி. பல ஆண்டுகளாக அவர்கள் வெல்வது மிகவும் கடினமாக உள்ளது," என்றார் கங்குலி.

கங்குலி தற்போது வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக உள்ளார், ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகராகவும் உள்ளார்.

"முதலில் ஒரு பயிற்சியாளர் முடிக்கட்டும், பிறகு இன்னொரு பயிற்சியாளர் குறித்து யோசிப்போம்," என்றார்.

"எப்படியிருந்தாலும் நான் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர். ஐ.பி.எல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் நான் கவனிக்கிறேன். கடந்த ஆண்டு எனது முதல் சீசனில், அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடைசியாக இருந்த அணி, அரையிறுதி வரைக்கும் சென்றது," என்றார் கங்குலி.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் ஓய்வு குறித்து கோலி, தேர்வுக்குழு முடிவெடுக்க வேண்டும்
  • உலகக் கோப்பைக்கு பிறகு தோனி எந்த போட்டியிலும் இடம்பெறவில்லை
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி இடம்பெறவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
Advertisement