டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 26வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி!

Updated: 11 October 2019 15:42 IST

இரண்டாவது நாள் கோலிக்கு ஒரு சில பதட்டமான தருணங்கள் இருந்தபோதும், ​​சிறப்பாக ஆடி டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 26வது சதத்தை நிறைவு செய்தார்.

Virat Kohli Scores 26th Test Century To Extend Indias Dominance
இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் 63 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார் விராட் கோலி. © AFP

விராட் கோலி, புனேவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் சதமடித்து, இந்தியாவின் ரன்களை அதிகரித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி ஒரு அபூர்வ தோல்வியை பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் 63 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய கேப்டன் இரண்டாவது நாளில் சதத்தை நிறைவு செய்தார். இரண்டாவது நாள் கோலிக்கு ஒரு சில பதட்டமான தருணங்கள் இருந்தபோதும், ​​சிறப்பாக ஆடி டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 26வது சதத்தை நிறைவு செய்தார்.

இரண்டாவது நாளை விராட் கோலி மற்றும் ரஹானே இருவரும் மூன்று விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் என்ற கணக்கில் தொடங்கினர். ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்காவுக்கு நன்றாகத் தொடங்கினார், சரியான வரிசையையும் நீளத்தையும் தொடர்ச்சியாகத் தாக்கி இந்திய நட்சத்திரங்களுக்கு பேட்டிங்கை கொஞ்சம் கடினமாக்கினார்.

மறுபுறத்தில் கோலியின் பார்ட்னர் ரஹானே டி.ஆர்.எஸ் அழைப்பிலிருந்து தப்பினார். ஆனால் ஒட்டுமொத்த ரஹானேவும் திடமாக இருந்தார் மற்றும் ஸ்ட்ரைக்கை அற்புதமாக சுழற்றினார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சற்று அச்சுறுத்தும் விதமாகவே இருந்தனர். ஆனால், கோலியையும், ரஹானேவையும் கட்டுப்படுத்துவதில் சற்று கவன குறைவாகவே இருந்தனர்.

இரண்டாவது டெஸ்ட்டில் முதல் நாளில் மாயங்க் அகர்வால் தனது முதல் சதத்தை குவித்தார். இது இந்தத் தொடரின் இரண்டாவது சதமாகும்.

டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார், ஆனால் முந்தைய டெஸ்டில் இரட்டை சதம் அடித்த ரோஹித் ஷர்மா, விசாகப்பட்டினத்தில் காட்டிய திறனை இரண்டாவது டெஸ்ட்டில் காட்ட தவறினார். காகிசோ ரபாடாவின் கடுமையான வேகமும் நிலைத்தன்மையும் 10வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை 14 ரன்களில் ஆட்டமிழக்க செய்தது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
Advertisement