ரோஹித் Vs கோலி: டி20 போட்டியில் அரைசத சாதனையை முந்தப்போவது யார்?

Updated: 03 August 2019 16:27 IST

இன்று இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகளும் தங்களுடைய முதல் டி20 போட்டியை ஃப்லோரிடாவில் லாடர்ஹில் மைதானத்தில் ஆடவுள்ளது.

Virat Kohli, Rohit Sharma To Battle It Out For Massive T20I Record
இரு வீரரகளும் தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இருவரும் சமநிலையில் 20 அரைசதங்கள் அடித்துள்ளனர். © AFP

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடவுள்ளது. இன்று இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகளும் தங்களுடைய முதல் டி20 போட்டியை ஃப்லோரிடாவில் லாடர்ஹில் மைதானத்தில் ஆடவுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அதிக அரைசதம் அடித்த விரர்கள் என்ற பட்டியலில் யார் முன்னிலை பெறுவார்கள் என்ற போட்டியில் உள்ளனர். இரு வீரரகளும் தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இருவரும் சமநிலையில் 20 அரைசதங்கள் அடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில் 16 அரைசதங்களுடன் மார்டின் கப்தில் உள்ளார்.

இருந்தாலும், விராட் கோலி 67 போட்டிகளில் (62 இன்னிங்ஸ்) மட்டுமே ஆடி 20 அரைசதங்கள் குவித்துள்ளார். ஆனால், ரோஹித் ஷர்மா 94 போட்டிகளில் (86 இன்னிங்ஸ்) இடம்பெற்று 20 அரைசதங்கள் குவித்துள்ளார்.

அடுத்த இந்திய பேட்ஸ்மேனான ஷிகர் தவான் 50 போட்டிகளில் (49 இன்னிங்ஸ்) ஆடி 9 அரைசதங்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் இந்த சாதனைக்காக பேசப்படாமல், களத்துக்கு வெளியில் இருவருக்கு இடையில் இருக்கும் பிரச்னை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறிய பிறகு, இருவருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி பிரச்னைகள் ஏதுமில்லை என்று தெளிவுபடுத்தினார். "இதை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிவது சரியானதல்ல. அது மரியாதை குறைக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் ஒரு பிரச்னையும் இல்லை," என்று கோலி கூறியிருந்தார்.

"என்னுடைய கருத்து படி இந்த விஷயங்கள் புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு உள்ளன. வெளிவரும் சில செய்திகளை பார்க்கும் போது அவ்வளவு அபத்தமானதாக இருக்கும். நான் சில பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தேன், அங்கு சொன்னதெல்லாம்,  'aap log kya khele (நீங்கள் அனைவரும் சிறப்பாக ஆடினீர்கள்)' என்பது தான் ," என்றார் கோலி.

"நாம் பொய்களை ஊட்டி வளர்க்கிறோம். உண்மையை ஏற்க மறுக்கிறோம். நடந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நம் கண் முன் மறைந்து விடுகிறது. நாமாகவே சிலவற்றை கற்பனை செய்து, மண்டையில் ஏற்றிக்கொண்டு, அது தான் உண்மை என்று நினைத்துகொள்கிறோம்" என்றார் கோலி.

Comments
ஹைலைட்ஸ்
  • ரோஹித், கோலி சமநிலையில் 20 அரைசதங்கள் அடித்துள்ளனர்
  • முதல் டி20 போட்டியை ஃப்லோரிடாவில் லாடர்ஹில் மைதானத்தில் ஆடவுள்ளது
  • இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 இன்று ஆடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
Advertisement