கோலி - ரோஹித் சர்மா குறித்த வதந்திகள் "முழுமையான முட்டாள்தனம்" - ரவி சாஸ்திரி!

Updated: 11 September 2019 11:42 IST

விராட் கோலி, ரோஹித் ஷர்மா வதந்திகள் குறித்து, இண்டர்வியூ ஒன்றில் பேசிய  ரவி சாஸ்திரி, இதை "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறியுள்ளார்.

Virat Kohli-Rohit Sharma Rift Rumours "Absolute Nonsense", Says Ravi Shastri
உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா ஐந்து சதங்கள் எடுத்தார். © AFP

விராட் கோலி மற்றும் ரோஹித்  ஷர்மா இருவரும் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளனர். உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா ஐந்து சதங்கள் எடுத்தார். அதே சமயம் விராட் கோலி சமீபத்தில், 28 டெஸ்ட் போட்டிகள் வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இத்தனை சாதனைகளுக்கு பிறகும், இந்த இரு வீரர்களுக்கு இடையில் பிரச்னை என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதனால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இண்டர்வியூ ஒன்றில் பேசிய  ரவி சாஸ்திரி, இதை "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறியுள்ளார்.

"கேளுங்கள், நான் ட்ரெஸிங் ரூமில் 5 வருட காலமாக உள்ளேன். வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் மற்றும் ஒருவரை ஒருவர் எப்படி ஊக்கப்படுத்துகிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன். இதை நான் முழு முட்டாள்தனம் என்று நினைக்கிறேன்," என்றார் ரவி சாஸ்திரி.

"நான் அவர்களோடு இருந்திருக்கிறேன், அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று எனக்கு தெரியும். அப்படி ஏதும் பிரச்னை என்றால், ரோஹித் ஏன் உலகக் கோப்பையில் 5 சதமடிக்க வேண்டும்? விராட் கோலி ஏன் இப்போது செய்து கொண்டிருப்பதை செய்ய வேண்டும்? இருவரும் இணைந்து எப்படி பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள்?" என்றார் சாஸ்திரி.

மேற்கிந்திய சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு, விராட் கோலி ரோஹித் ஷர்மாவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்று தெளிவுப்படுத்தினார்.

"இதை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிவது சரியானதல்ல. அது மரியாதை குறைக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் ஒரு பிரச்னையும் இல்லை," என்று கோலி கூறியிருந்தார்.

"நாம் பொய்களை ஊட்டி வளர்க்கிறோம். உண்மையை ஏற்க மறுக்கிறோம். நடந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நம் கண் முன் மறைந்து விடுகிறது. நாமாகவே சிலவற்றை கற்பனை செய்து, மண்டையில் ஏற்றிக்கொண்டு, அது தான் உண்மை என்று நினைத்துகொள்கிறோம்" என்றார் கோலி.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை மூன்று வடிவிலான போட்டியிலும் வென்றுள்ளது. இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Advertisement