புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!

Updated: 17 May 2019 12:51 IST

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் கோலி மற்றும் பன்ட் ராப் (Rap) பாடி அந்த பொருளின் நன்மைகள் குறித்து விளக்குகின்றனர்.

Virat Kohli, Rishabh Pant Mercilessly Trolled For Their Rap In New Ad
விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் சரும பராமரிப்பு நிறுவனத்துக்கு விளம்பர தூதர்களாக கையெழுத்திட்டுள்ளனர். © Screengrab @imVkohli

விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் சரும பராமரிப்பு நிறுவனத்துக்கு விளம்பர தூதர்களாக கையெழுத்திட்டுள்ளனர். அந்த நிறுவனம் இப்போது புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் நடித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் கோலி மற்றும் பன்ட் ராப் (Rap) பாடி அந்த பொருளின் நன்மைகள் குறித்து விளக்குகின்றனர். "Walking like a dude, feeling all cool, you've got the look, you're gonna rule," கோலி விளம்பரத்தின் தொடக்கத்தில் பாடுகிறார். இந்த விளம்பரம் குறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். இந்த விளம்பரத்துக்கு பல கிண்டல்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சமீபத்தில், விராட் கோலி ஒப்புக்கொண்ட பல விளம்பரங்களில் இதுவும் ஒன்று. ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்திருக்கும் வேலையில், விளம்பரங்களில் இப்போது பிஸியாக இருக்கிறார் கோலி.

"ஹிமாலயாஸ் குழுவுடன் இணைந்து வேலை செய்வதும், ஆடவர் ஃபேஸ் வாஷுக்கு விளம்பர தூரதராக இருப்பதும் எனக்கு உற்சாகமாக உள்ளது. இது ஒரு நம்பிக்கைக்குரிய நிறுவனம், இதில் பல வருடங்களாக இணைந்து வேலை பார்த்து வருகிறேன். ஆடவருக்கான பொருள்களுக்கு விளம்பரம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

"ஹிமாலயாஸ் நிறுவனத்துடன் இணைந்து வேலை பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 88 ஆண்டுகளாக ஆண்களின் சருமத்தை பராமரிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது. என்னை போன்ற இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியானதாக இருக்கிறது. இந்த நிறுவனத்துடன் மேலும் பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன்" என்று பன்ட் கூறினார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை அணியில் பங்கேற்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் விளம்பரத்தில் நடித்துள்ளனர்
  • இந்திய மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை அணியில் பங்கேற்கிறது
  • இந்த விளம்பரத்தை சில மணி நேரத்தில் பல லட்சம் மக்கள் பார்த்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
Advertisement