ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!

Updated: 10 November 2019 16:49 IST

உணவு சமைப்பதை இதுவரை தான் முயற்சி செய்ததில்லை என்றும், ஓய்வுக்கு பிறகு நிச்சயமாக அதை முயற்சி செய்வார் என்றும் கூறினார் விராட் கோலி.

டெல்லியில் வளர்ந்த விராட் கோலி, தனது உடற்பயிற்சி நிலைகளை பராமரிக்க ஒரு சைவ உணவு உண்பவராக மாறினார். என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், விராட் கோலி தனது உணவு விருப்பத்தேர்வுகள் பல ஆண்டுகளாக எவ்வாறு மாறியது என்பது பற்றி பேசினார், ஆனால் அவர் இன்னும் உணவு விரும்பியாக இருக்கிறார். "வீட்டில் செய்யப்பட்ட பஞ்சாபி உணவு" அதாவது "ராஜ்மா-சாய்லா, பட்டர் சிக்கன் மற்றும் நான்" போன்ற உணவை உண்டு தான் வளர்ந்ததாக விராட் கோலி கூறினார். உணவு சமைப்பதை இதுவரை தான் முயற்சி செய்ததில்லை என்றும், ஓய்வுக்கு பிறகு நிச்சயமாக அதை முயற்சி செய்வார் என்றும் கூறினார் விராட் கோலி.

"நான் சிறுவயதிலிருந்தே உணவு உண்பவனாக இருந்தேன், நான் முயற்சிக்கும் உணவுகளை நேசித்தேன், அப்போது நிறைய நொறுக்கு தீணி சாப்பிடுவேன். ஆனால் பின்னர் நான் பயணம் செய்து வெவ்வேறு உணவு வகைகளை முயற்சிக்க ஆரம்பித்தேன். ஆமாம் நான் உணவை விரும்புகிறேன் .... நன்றாக சமைத்த உணவு விரும்புகிறேன், "கோலி பேட்டியில் கூறினார்.

"நான் (சமைக்கவில்லை) ஆனால் சுவையை நான் புரிந்துகொள்கிறேன், ஒரு டிஷ் எவ்வளவு நன்றாக சமைக்கப்படுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், எனவே அதைக் கற்றுக்கொள்ள முடியும். நான் கிரிக்கெட் விளையாடுவதை முடித்தவுடன், சமையல் ஏதோ ஒன்று செய்வேன் என்று நான் நினைக்கிறேன், நான் நிச்சயமாக ஆர்வமாக இருப்பேன்," சமீபத்தில் 31 வயதை எட்டிய கோலி கூறினார்.

பங்களாதேஷுக்கு எதிரான நடந்து வரும் டி20 தொடரிலிருந்து கோலி ஓய்வெடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து விலகியபோது, ​​கோலி தனது 31 வது பிறந்தநாளை பூட்டானில் மனைவி மற்றும் பாலிவுட் நடிகர் அனுஷ்கா ஷர்மாவுடன் கொண்டாடினார்.

31 வயதான அவர் நவம்பர் 14 முதல் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தவுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs West Indies : 17 ரன்களில் 3 விக். இழந்து தள்ளாடும் வெஸ்ட் இண்டீஸ்!!#LiveScoreCard
India vs West Indies : 17 ரன்களில் 3 விக். இழந்து தள்ளாடும் வெஸ்ட் இண்டீஸ்!!#LiveScoreCard
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
Advertisement