கோலி கம்பேக்... ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Updated: 15 February 2019 18:31 IST

பிப்ரவரி 24ம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரும், மார்ச் 2ம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் துவங்கவுள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Virat Kohli To Lead India As BCCI Announces Squad For T20I Series And ODIs vs Australia
விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. © AFP

2019 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆடும் தொடரில் தேவையான வீரர்களை பரிசோதிக்கும் விதமாக அணித்தேர்வு இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படியே இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி 24ம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரும், மார்ச் 2ம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் துவங்கவுள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் தொடரை பொறுத்தமட்டில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் உலகக் கோப்பைக்கு வாய்ப்பு வழங்க வேறு யாரையாவது சோதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தேர்வுக்குழுவினர் உலகக் கோப்பையில் ஏற்கெனவே 13 பெயர்களை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் கோலி, தவான், ரோஹித், ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், சஹால், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ராஹ் மற்றும் ஷமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இந்த 13 பேரும் இடம்பெற்றுள்ளனர். 

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா ( துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி ( கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ராஹ், முகமது ஷமி, சஹால்,சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல்

கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி

விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா ( துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி ( கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ராஹ், முகமது ஷமி, சஹால், குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், புவனேஷ்வர் குமார்

டி20 தொடருக்கான இந்திய அணி.:

விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா ( துணை கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா,விஜய் ஷங்கர், சஹால்  ஜஸ்ப்ரித் பும்ராஹ், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயன்க் மார்கண்டே.

ஒருநாள் அணியை பொறுத்தமட்டில் உலகக் கோப்பையில் இடம்பெறப்போவது பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் யார்  என்ற கேள்விக்கு, "ஒருநாள் போட்டியில் பன்ட் தேவை அதிகம்" என்பதை அணித்தேர்வு  உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல் கலீல் அகமதின் இடம் குறித்த கேள்விக்கு ஷமி, பும்ராஹ், புவனேஷ்வர் குமார் தான் அணியில் இடம் பெறக்கூடும் என்ற விஷயத்தையும் தெரிவிக்கும் விதமாக அணி தேர்வு உள்ளது. கிட்டத்தட்ட இந்த அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்குமே தவிர உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. 

கடைசி மூன்று போட்டிகளுக்கான அணி தான் உலகக் கோப்பைக்கான அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருப்பார்
  • பிப்ரவரி 24ம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்
  • மார்ச் 2ம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் #ScoreCard
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் #ScoreCard
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
Advertisement